பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
23. மாமல்லைத் தல சயனர்

துவாபர யுகத்திலே ஓர் அரசன். அரக்கர் இனத்தைச் சேர்ந்தவன் என்றாலும், நல்ல இதயம் படைத்திருந்தான், மக்களையெல்லாம் நீதி தவறாது ஆண்டு வந்தான். ஆனால், மூன்றுலகையும் அடிமை கொண்டு, திரிலோகத்துக்குமே ஏக சக்ராதிபதியாக வாழ்ந்து வந்தான்.

ஆதலால் அவனை வீழ்த்த வேண்டினர், தேவர்கள் - நாராயணனிடம். நாராயணனிடத்து இந்த அரசனுக்கு அளவிடற்கரிய அன்பு. ஆதலால் நாராயணனும் அவனை ஆட்கொள்ள நாளும் கிழமையும் எதிர்நோக்கி இருந்தார்.

அரசன் ராஜசூய யாகம் ஒன்றைச் சிறப்பாக நடத்தினான். யார் எதைக் கேட்டாலும் கொடுக்கிறேன் என்று கங்கணம் கொண்டு செய்யும் யாகம் அது. அந்த யாகசாலைக்கு ஒரு குள்ள வேதியன் வருகிறான். அரசனிடம் மூன்றடி மண் யாசித்துப் பெறுகிறான். அரசனின் குலகுருவாம் சுக்ராச்சாரியார் தானம் கொடுக்காதே என்று தடுக்கிறார். அதையும் மீறியே கேட்ட தானத்தைக் கொடுத்து விடுகிறான், அரசன்.

உடனே குள்ளனாக வந்த வேதியன் விசாவரூபம் எடுக்கிறான். விண்ணுக்கும் மண்ணுக்கும் வளர்ந்து திரிவிக்கிரமனாக உயர்கிறான். ஒரு தாளால் வானம் முழுவதையும், மற்றொரு தாளால் இந்தப் பூவுலகம் முழுவதையுமே அளந்து விடுகிறான். மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டபோது பரமபக்தனான அரசன் தன் தலையையே தாழ்த்திக் கொடுக்கிறான்.

அவன் தலையில் கால் வைத்து, அவனைப் பாதாளத்துள் அமிழ்த்துகிறபோது, அவன் வேண்டிக் கொள்கிறான், அவன் இருந்து அரசாண்ட இடம் அன்று முதல் அவன் பெயராலேயே வழங்க வேண்டுமென்று. பக்தன் விருப்பத்தை