பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24. கழுகுதொழு வேதகிரி

ன் நண்பர் ஒருவர் நல்ல பகுத்தறிவுவாதி. செங்கல்பட்டில் நான் உத்தியோகம் ஏற்றிருந்த போது, என் வீட்டிற்கு வந்திருந்தார். மாமல்லபுரம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். என்னைத் துணைக்கு அழைத்தார். 'மாமல்லபுரம் செல்லும் வழியில் திருக்கழுக்குன்றம் இருக்கிறதே, அங்கு பக்ஷி தரிசனம் செய்ய வேண்டாமா? தினசரி சரியாய்ப் பகல் பதினோரு மணிக்கு இரண்டு கழுகுகள் இந்த மலை மேல் வந்து, அங்கு பண்டாரம் கொடுக்கும் சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிட்டுவிட்டுப் போகின்றனவே, அதைப் பார்க்க வேண்டாமா?' என்றேன் நான்.

'இது என்ன பெரிய அதிசயம். நான் மத்தியானச் சாப்பாட்டைச் சரியாக ஒரு மணிக்கு என் ஆபீஸ் அறையிலேயேதான் வைத்துக் கொள்கிறேன். அங்கும் தினசரி அதே நேரத்துக்கு இரண்டு அணில்கள் வருகின்றன. நான் போடும் உணவைச் சாப்பிட்டு விட்டுப் போகின்றன. பக்ஷிகளுக்கெல்லாம் கால உணர்வு (Tine sense) ரொம்பவும் அதிகம். ஆதலால் குறித்த காலத்தில் இங்கு இன்னது கிடைக்கும் என்ற நியதி ஏற்பட்டு விட்டால், அந்த இடத்துக்கு அவை வரத் தவறுவதே இல்லை!' என்று என்னை விளாசி விட்டார், அந்தப் பகுத்தறிவுவாதி.

'உண்மைதான் மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகளுக்கு எல்லாம் கால உணர்வு அதிகமே. என்றாலும் ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல, நூற்றுக் கணக்கான வருஷங்களாகக்' குறித்த வேளையில் குறித்த இடத்தில் இரண்டு கழுகுகள் தினம் வந்து உண்டு செல்கின்றன என்றால், அது ஒரு அதிசயம்தானே? அதிலும் இன்றைக்கு இருநூற்று எழுபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஆம்! 3-1-1681 அன்று பகல் பன்னிரண்டு மணிக்கு இங்கு வந்த டச்சுக்காரர்கள் கூட