பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

213

இப்படிக் கழுகுகள் வருவதையும், அவை உண்டு திரும்புவதையும் பற்றி அன்றே எழுதி வைத்திருக்கிறார்களே ! அதற்கு என்ன சொல்கிறீர்? இத்தனை வருஷமும் இரண்டே கழுகுகள் கால உணர்வு பெற்றிருக்கின்றன சங்கு தீர்த்தம் என்கிறீரா?' என்று மடக்கினேன் நண்பரை. . அதன் பின் அவரைக் காரில் ஏற்றிக்கொண்டு திருக்கழுக்குன்றத்தின் மலை அடிவாரத்துக்கு இழுத்துச் சென்றேன்.

இருநூற்று அறுபத்து நாலு ஏக்கர் நிலத்தில் ஐந்நூறு அடி உயரத்தில் இருக்கிறது அந்தச் சஞ்சீவி மலை. அதற்கு நாலு சிகரங்கள். நான்கு வேதங்களுமே நான்கு சிகரங்களாக இருப்பதனால் வேதகிரி என்றும், அந்த வேதகிரிக்கு உரிய வேதகிரி ஈஸ்வரர் அதர்வண வேதச் சிகரத்தின் மேல் இருக்கிறார் என்றும் சொல்வார்கள்.

மலையின் மேல் ஏற நல்ல படிக்கட்டுகள் கட்டியிருக்கிறார்கள். ஒன்றிரண்டு இடத்தில் தான் படிக்கட்டுகள் செங்குத்தாக இருக்கின்றன. மற்றப்படி எளிதாகவே ஆங்காங்குள்ள மண்டபங்களில் தங்கி இளைப்பாறிப் படிகளில் ஏறி, மலைச் சிகரத்தை அடையலாம். சுமார் பத்து பத்தரை மணிக்குள்ளேயே சென்று விட வேணும். நூற்றுக் கணக்கானவர்கள் நமக்கு முன்னேயே அங்கு வந்திருப்பார்கள். எல்லோரும்