பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
25. பெரும்பூதூர் உடையவர்

வைஷ்ணவ மத ஆச்சாரியர்களில் தலை சிறந்தவராக விளங்குபவர் ஸ்ரீராமாதுஜர். ஆதி சங்கரர் வேதங்கள் உப நிஷதங்கள் ஆகியவற்றுக் கெல்லாம் பாஷ்யங்கள் செய்து, பரப் பிரம்மம் ஆம் இறைவனை அடைய ஞானமார்க்கத்தை நமக்குக் காட்டிச் சென்றார்.

ஞான மார்க்கத்தோடு பக்தி மார்க்கமும் சேர்ந்தால்தான் பிரம்மத்தை உணர்வது எளிது என்று உபதேசித்து, சங்கரரின் வித்வைத சித்தாந்தத்தைக் கொஞ்சம் மாற்றி, விசிஷ்டாத்வைத சித்தாந்தமாக நமக்கு அருளியவர், ஸ்ரீராமானுஜர். இவரது வாழ்க்கை வரலாறு சுவையுடையது.

சற்று ஏறக்குறையத் தொள்ளாயிரத்து நாற்பத்து இரண்டு வருஷங்களுக்கு முன் பரம பாகவதர்களான கேசவ சோமயாஜி, காந்திமதி என்பவர்களின் பிள்ளையாக ராமாநுஜர் அவதரிக்கிறார். இவர் அவதரித்த தலம் ஸ்ரீபெரும்பூதூர். இவருக்குத் தாய் தந்தையர் அன்று இட்ட பெயர் இளையாழ்வார். பாலப்பருவம் கழிந்ததும் காஞ்சியை அடுத்த

திருப்புட்குழியில் உள்ள யாதவப் பிரகாரத்து குரு குலத்தில் சேர்த்து விடுகின்றனர் பெற்றோர்.

இவருக்கோ யாதவப் பிரகாசர் சொல்லும் வேதாந்த