பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26. உத்தரமேரூர் சுந்தரவரதன்

து ஜனநாயக யுகம். மக்களை மக்களுக்காக மக்களே ஆளும் முறை இன்று எங்கும் பரவியிருக்கிறது. மக்களுக்காக அவர்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையே எலெக்ஷன் என்றும் தேர்தல் என்றும் சொல்கிறோம். வெள்ளைக்காரர்கள் காலத்தில் இந்த எலெக்ஷன் முறை அமலுக்கு வந்தது.

அப்போது முதலில் வாக்குரிமை, சொத்துடையவர்களுக்கும் கல்வி அறிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்குமே இருந்தது. பின்னர் நாளடைவில் எழுதப்படிக்கத் தெரிந்த எல்லோருக்கும் வாக்குரிமை உண்டு என்று வந்தது. இந்த நிலையில் கூட வாக்காளர்களில் பெரும் பகுதியினர்க்குத் தங்கள் கையெழுத்தைப் போடத் தெரியுமே ஒழிய, பிறர் எழுதியதையோ அச்சடித்ததையோ வாசிக்கத் தெரியாது.

ஆதலால் வாக்குரிமைச் சீட்டாம் ஓட் பதிவு செய்வதில் எவ்வளவோ தகராறுகள். இவற்றைத் தவிர்க்க, ஓட்டுப் பெட்டிகளில் பச்சை, சிவப்பு, மஞ்சள் என்ற வர்ணக் காகிதங்களை ஒட்டி, அந்த வர்ணத்துக்கு உரிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தார்கள். மங்களகரமானமஞ்சள் என்பது போன்ற தேர்தல் முறையிருந்தது, நமது தலைமுறையிலேயே.

காலம் மாறிற்று. வெள்ளைக்காரனை விரட்டி அடித்து விட்டு நாமே நம்மை ஆளும் சுதந்திரம் பெற்றோம். நாமோ நம் ஓட்டர்களுக்கு எழுதப் படிக்கத் தெரிய வேண்டுவது அவசியம் என்று கருதவில்லை. வயது வந்த எல்லா ஆண்மகனுக்கும், பெண் மகளுக்கும் வாக்குரிமை உண்டு என்று நிர்ணயித்தோம்.

இது காரணமாக, முன்னர் இருந்தது போல், பச்சை மஞ்சள் சிவப்பு என்பதைக் கூட நமது வோட்டர்களால் வேறுபடுத்திக்