பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காண வகையில்லை. அவ்வளவு அறிவு வளர்ச்சி! ஆதலால் இரட்டைக் காளை, கதிர் அரிவாள், ஓலைக் குடிசை, உதய சூரியன், தாமரை, கூஜா, சைக்கிள் என்றெல்லாம் சின்னங்களை ஓட்டுப் பெட்டியில் ஒட்டி, அந்தப் பாகுபாட்டைத் தெரிந்தாவது ஓட்டளிக்கச் செய்திருக்கிறோம், நம் ஓட்டர்களை, இந்த முறையில் கூட எத்தனையோ குளறுபடிகள். இந்த முறை யெல்லாம் நமது தாயகமாம் இந்தியாவிலே.

இம்மட்டோடு, மக்களின் பிரதிநிதிகளாக யார் யார் வரலாம் என்பதற்கு யாதொரு நிர்ணயமும் இல்லை. யார் வேண்டு மானாலும் வரலாம் என்ற நிலை வேறே. இப்படித்தான் ஜனப் பிரதிநிதி, ஓட்டர்கள், ஓட்டளிக்கும் முறை என்றெல்லாம் நமது ஜனநாயகம் விரிந்திருக்கிறது.

'இந்த ஜனநாயகம் வாழ்க!' என்று ஊரோடு சேர்ந்து கூவுவதைத் தவிர, வேறு ஒன்றும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம் நம்மில் பெரும்பாலோர். இப்படி யெல்லாம் இன்று நடக்கும் நமது அருமைத் தமிழ் நாட்டிலே, அன்று, ஆம், ஆயிரம் வருஷங்களுக்கு முன் இந்தத் தேர்தல் முறை எப்படி நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? இதைத் தெரிந்து கொள்ளவே இன்று நாம் உத்தர பேரூருக்குச் செல்கிறோம்.

உத்தரமேரூர் செங்கல்பட்டு ஜில்லாவிலே உள்ள ஒரு சிறிய ஊர்தான். இதற்குப் போகச் சென்னை - திருச்சி டிரங்க் ரோட்டிலே, சென்னையிலிருந்து நாற்பது மைல் வந்து, செங்கல்பட்டு, பாலாற்றுப் பாலம் எல்லாம் கடந்து மாமண்டூர் பக்கம் மேற்கு நோக்கிப் பத்தொன்பது மைல் போக வேணும். இல்லை என்றால் சென்னையிலிருந்து காஞ்சி வந்து, வேகவதி, பாலாறு எல்லாவற்றையும் கடந்து மாகறல் வழியாகவும் வந்து சேரலாம்.

ஊருக்குள் செல்லும் வழியிலேயே கடைத் தெருவையும் பஸ் ஸ்டாண்டையும் ஒட்டி, ஒரு சிறு மாடக் கோயில், மதில்