பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

வேங்கடம் முதல் குமரி வரை

சாத்தியமான காரியமே. அதை எல்லாம் சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கே விட்டு விடலாம்.

இக்குடவோலைக் கல்வெட்டு சாஸனத்தின்படி யார் யார் வாரியப் பிரதிநிதிகளாகத் தேர்தலுக்கு நிற்க யோக்கியதை உடையவர்கள், யார் யார் தகுதியற்றவர்கள் என்றும் நாம் அறிகிறோம். எழுபது வயதுக்கு மேற் போகாதவர்களாகவும், முப்பத்தைந்து வயதுக்குக் குறையாதவர்களாகவும் இருத்தல் வேண்டும். தேர்தலுக்கு நிற்பவர்கள் சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்தவர்களாகவும், குணங்களில் குறைபாடு

சுந்தரவரதர் கோயில்

இல்லாதவர்களாகவும் இருத்தல் வேண்டும். வாரியங்களில் வேலை செய்து கணக்குக் காட்டாமல் இருந்தாரும், அவர்களது பந்துக்களும் தேர்தலுக்கு நிற்கத் தகுதியற்றவர்கள். (இதை விடக் கடுமையான நிபந்தனைகள் நமது இந்தியச் சட்டத்திலும் இருக்கவே செய்கிறது என்றாலும், அத்தனையையும் சரிக்கட்டி விட்டு, உண்மையிலேயே தகுதி இல்லாதவர்கள் பலர் இன்றையத் தேர்தல்களுக்கு நின்று வெற்றி பெறுகிறார்கள் என்பதும் உண்மைதான்). குடவோலையைப் பற்றிய கல்வெட்டுத் தகவல்கள் இத்தனையையம் எளிதாகத் தெரிந்து கொண்டீர்கள், ஆனால் இவ்வளவு தகவலையும் வைகுண்டப்பெருமாள் கோயில் சென்றால் தெரிந்து கொள்ள