பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வேங்கடம் முதல் குமரி வரை

அந்தப் பக்தர்கள் தயவால், அவர்களைச் சேர்ந்தவர்களில் ஒருவராய் உள்நுழைந்து விட்டால், எம்பெருமான் திருக்கோலத்தைக் கண்குளிரக் காணலாம். வக்ஷ ஸ்தலத்தில் ஸ்ரீதேவியை வைத்திருக்கும் அந்த ஸ்ரீனிவாசப் பெருமாளைப் பாதாதி கேச பர்யந்தம், ஏன். கேசபர்யந்தம்? கேசத்துக்கும் மேலே நீண்டுயர்ந்திருக்கும் மணிமகுட பர்யந்தம் கண்டு தரிசிக்கலாம். அன்று இளங்கோ பாடினாரே,

"பகை அணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி
நலம்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ ஆடையில் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடுமால் நின்ற வண்ணம்"

என்று, அந்த வண்ணத் திருவுருவையே கண்டு தொழலாம். அழகினால் உயர்ந்துள்ள பெருமாள் திருவுருவங்கள் பல பார்த்திருப்போம், நாம். ஆனால், இந்த வேங்கடவனது திரு உருவில் இருக்கும் காம்பீர்யம் அலாதியாக இருக்கிறது.

பல்லவர் காலத்து விஷ்ணு சிலைகளில் உள்ள உத்தரீயம் இல்லை. நில உலகிலே வேங்கடவாணனுக்கு இருக்கின்ற பெருமையோடு கலை உலகிலும் வேங்கடவனாகவே (அழிவற்றஐசுவர்யம் உடையவனாகவே) இருக்கிறான் இவன்.

தெய்வத் திருமலை வாழ் வேங்கடவன் ரிக் வேதத்திலேயே இடம் பெற்றிருக்கிறான் என்பர், திருமந்திரம் பாடிய திருமூலரும், திருவந்தாதி பாடிய கபிலதேவ நாயனாருமே இந்த வேங்கடத்து மேயானைப் பாடி இருக்கிறார்கள். தொண்டர் அடிப்பொடியைத் தவிர மற்றைய ஆழ்வார்கள் எல்லாரும் மங்களா சாஸனம் செய்திருக்கிறார்கள்.

தொண்டைமான் சக்ரவர்த்திதான் இந்தக் கோயிலை எடுப்பித்தவர் என்று வேங்கடாசல மாகாத்மியம் கூறும். பல்லவர், சோழர், பாண்டியர், யாதவர் முதலிய அரசர்