பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

243

ஆதலால் 1798இல் இந்த ஏரிக் கரையைப் பலப்படுத்த விசேஷ சிரத்தை எடுத்திருக்கிறார். மழை காலம் முழுதும் இங்கேயே மராமத்து இலாகா அதிகாரிகளுடன் முகாம் செய்வது என்று திட்டமிட்டுக் கொள்கிறார். தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க முனைந்திருக்கிறார். அப்படி முகாம் பண்ணிய போது, ஏரியை நகரையெல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தவர், கோதண்டராமசாமி கோயில் வாயிலுக்கு வந்திருக்கிறார்.

கோதண்டராமன்

கோயில் கோபுரம் எல்லாவற்றையும் கண்டு அதிசயித்து நின்ற துரைமகனை அர்ச்சகர்களும் ஊர்ப் பிரமுகர்களும் கோயிலுக்குள் வந்து மற்ற அழகுகளையும் காண அழைத் திருக்கின்றனர். அவரும் காலில் உள்ள பாதரட்சைகளை யெல்லாம் கழற்றி வைத்து விட்டுக் கோயிலுக்குள் நுழைந்து வெளிப் பிராகாரத்தைச் சுற்றி வந்திருக்கிறார். அங்கு ஓரிடத்தில் கருங்கற்கள் பல குவித்து வைத்திருப்பதைப் பார்த்து, 'இவை ஏன் இங்கு குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன?' என்று கேட்டிருக்கிறார். அங்குள்ளவர்கள், இங்கு கோயில் கொண்டிருப்பவர் சக்கரவர்த்தித் திருமகனான ராமன். அவருடைய தர்ம பத்தினி ஜானகிக்கு என்று ஒரு தனிக் கோயில் இல்லை. அந்தத் தாயாருக்கு ஒரு கோயில் கட்டலாம் என்றே கல் எல்லாம் சேகரித்தோம். ஆனால் கட்ட