பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

29

விலக்கிவிட்டு அர்ச்சகர் ஹாரத்தி பண்ணினால், சிலந்தி, நாகம், யானைக் கொம்புகளோடு கண்ணப்பரது ஒரு கண்ணும் லிங்கத் திருஉருவில் தெரியும். அந்தராளத்திலே கூப்பிய கையனாய் வில்லைத் தாங்கிக் கொண்டு, கண்ணப்பரும் சிலை உருவிலே நிற்கிறார் அங்கே.

காளத்தி அப்பரை வணங்கித் திரும்பவும் வலமாகச் சுற்றினால், கிழக்கே பார்த்த திருக்கோயிலில் ஞானப் பூங்கோதை நிற்கிறாள், கம்பீரமான திரு உரு. இந்த "வண்டாடும் குழல் உமையைப் பாகத்தில் வைத்து மகிழ்ந்தவனே கண்டார்கள் காதலிக்கும் கணநாதனாம் காளத்தியான்' என்பர் சுந்தரர். இன்னும் கோயிலுக்குள் எண்ணற்ற பிராகாரங்கள்.

வெளியேயும் ஒரு மண்டபத்தில் கண்ணப்பர் சுமார் ஐந்தடி உயரத்தில், நல்ல கற்சிலை வடிவில், இது தவிரச் செப்புச் சிலை வடிவிலும் அவர் உண்டு .

இவைகளையெல்லாம் படம் பிடிக்க யாருக்கும் அனுமதி இல்லை. கோயிலுக்குள் நுழையும் போதேதான் காமிராவைக் கைப்பற்றிக் கொள்கிறார்களே, கோயில் நிர்வாகிகள். ஆனால், இங்குள்ள கண்ணப்பரைக் காட்டிலும் அழகான கண்ணப்பர் ஒருவரைச் சோழ நாட்டுச் சிற்பி கல்லில் உருவாக்கித் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலில் நிறுத்தி இருக்கிறான். கண்ணப்பர் தமிழ் மக்களின் பொது உடைமைப் பொருளாயிற்றே. அவரைத் தமிழ் நாட்டுப் புராணங்கள் எல்லாம் பாராட்டிப் புகழ்வது போலவே, சோழநாட்டுச் சிற்பியும் வடித்தெடுத்து நிறுத்தி இருக்கிறான்.

இந்தக் காளத்தியப்பர் கோயில் பழுதுற்றிருந்ததைத் தேவ கோட்டைமே. அருநா. ராமநாதன் செட்டியார் குடும்பத்தினர் பத்து லக்ஷம் செலவில் புதுப்பித்திருக்கின்றனர். இவ்வளவு செலவு செய்தும் உட்கோயில்களையே புதுப்பிக்க