பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

31

பட்டிருக்க வேண்டும். கோயிலின் நூற்றுக்கால் மண்டபம், காளி கோபுரம் முதலியன பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில், விஜயநகர மன்னர்கள் கட்டினார்கள் என்று திருவண்ணாமலையில் உள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

இத்தகைய சரித்திரப் பிரசித்தியோடு இலக்கியப் பிரசித்தியுமே பெற்றிருக்கிறது இவ்வூர். மதுரை சொக்கலிங்கப் பெருமானிடத்திலேயே குற்றம் குற்றமே என்று வாதாடிய சங்கப் புலவன் நக்கீரன், சாப விமோசனம் அடைந்து, கயிலாய தரிசனம் பெற்ற இடம் இதுவே. அதனாலேயே இத் தலத்தை தக்ஷிண கயிலாயம் என்கிறார்கள்.

'கயிலை பாதி காளத்தி பாதி' என்று அந்தாதி பாடிய நக்கீரதேவ நாயனார் இத்தலத்தைப் போற்றியிருக்கிறார். காளத்தியைத் தரிசித்தால் கயிலையைத் தரிசித்த பலன். ஆம், நமக்கும் கிடைத்து விடுகிறது, கயிலையைத் தரிசித்த பலன், காளத்தியைப் பற்றி, காளத்தி வாழ் கண்ணப்பரைப் பற்றி, இவ்வளவு தெரிந்து கொள்கிற காரணத்தால்.