பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. தணிகைக் குமரன்

அருணகிரியார் பிறந்து வளர்ந்து முருகன் அருள் பெற்றுப் பாடத் துவங்கியது, அண்ணாமலையிலே. 'எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருள் புகழை இயம்பிடல் வேண்டும்!' என்று பிரார்த்தித்த வண்ணமாய், அண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, ஊர் ஊராகக் கடந்து, முருகன் கோயில் கொண்டிருக்கும் தலம் தலமாகச் சென்று, குன்று குன்றாக ஏறித் திருப்புகழ் பாடி மகிழ்ந்தவர் அவர்.

இப்படிப் பல - தலங்களுக்கும் சென்றவர், திருவண்ணாமலைக்குப் பக்கத்திலே சுமார் அறுபது மைல் தூரத்திலே உள்ள திருத்தணிகைக்குச் சென்று, அங்குக் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானைக் கண்டு, அவன் புகழ் பாடப் பல வருஷ காலமாக வாய்ப்புக் கிடைக்காமல் இருந்திருக்கிறார். இப்படி இருந்தவர் கடைசியாக ஒரு நாள் தணிகைக்கே வந்திருக்கிறார். மலை மீது ஏறியிருக்கிறார். இந்திர நீலச் சுனையில் மூழ்கியிருக்கிறார். ஆபத்சகாய விநாயகரை வணங்கியிருக்கிறார். அருள் ஞான சக்திதரனாகிய தணிகைக் குமரேசனைக் கண்டு தொழுதிருக்கிறார்.

அந்த நிலையில் உள்ளத்திலே ஒரு தாபம். 'நாம் பிறந்து வளர்ந்த ஊருக்கு இவ்வளவு பக்கத்திலேயுள்ள இந்த முருகன் சந்நிதிக்கு இத்தனை நாட்களாக வர இயலாமற் போனதற்குக் காரணம் என்ன?' என்று தம் உள்ளத்தையே கேட்கிறார். 'இந்தத் தென் தணிகைக் குமரனின் தாள்களைச் சூடாத தலையையும், நாடாத கண்களையும், தொழாத கைகளையும், பாடாத நாவினையும் பிரமன் நமக்குப் படைப்பானேன்? அப்படி அவன் நம்மைப் படைக்கும்படி நாம் அவனுக்குச் செய்த குற்றந்தானென்ன?' என்றெல்லாம் ஏங்கியவர், 'நான் செய்த குற்றம் என்ன?' என்ற கேள்வியை அந்த முருகனி