பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

47

பேய் பிசாசு பிடித்துள்ள பெண்களை இங்கு கூட்டி வந்து, மலை மேலுள்ள அனுமந்த தீர்த்தத்தில் முழுகி எழச் செய்து, அனுமார் சந்நிதியில் கொண்டு வந்து இருத்தி விட்டால் போதும். ஏதோ கொஞ்ச நேரம் ஆட்டம் போட்டாலும், அதன் பின் அமைதியாய்ப் படுத்துத் தூங்கி விடுகிறார்கள், பெண்கள். தூங்கி எழுந்தால் பிணி நீங்கி இருக்கிறது. பேயும் பிசாசும் மவையை விட்டு இறங்கியே ஓடியிருக்கிறது.

இப்படி மக்கள் பிணி தீர்க்கும் அருளாளனாக இருப்பதனால் தான், இன்றும் நூற்றுக் கணக்கான தேசாந்திரிகள் இங்கு வந்து, இங்குள்ள நரசிம்ம தீர்த்தம் முதலிய திருக்குளங்களிலே நீராடி, நியமங்களை யெல்லாம் அனுஷ்டிக்கிறார்கள். கார்த்திகை மாதத்தில் இந்த ஊரும், இக்குன்றுகளும், இக் கோயில்களும் ஜாம் ஜாம் என்றிருக்கும்.

இந்த யோக நரசிம்மரும், யோக ஆஞ்சநேயரும் நல்ல சிலா விக்கிரகங்கள். உற்சவ மூர்த்திகளாகச் செப்புச் சிலை வடிவில் இவர்கள் உருவாகவில்லை. ஆதலால் உற்சவமெல்லாம் இம் மலைகளை விட்டு ஒரு மைல் தொலைவில் ஊருக்கு மத்தியில் இருக்கும் பக்தவத்ஸலருக்குத்தான்.

இவர் யோக நிலையில் இல்லை. ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக நல்ல போக நிலையில் தான் இருக்கிறார். யோகமும்