பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

53

விநாயகனையே தொழுது, யானையைக் காட்டிப் பயமுறுத்தி, அவள் தன்னைக் கட்டித் தழுவச் செய்கிறான். பின்னர், தன் மெய்யுருவை அவளுக்குக் காட்டி, அவளை மணம் புரிந்து கொள்கிறான்.

இப்படித்தான் திருத்தணிப் பதியில் வாழும் முருகன், குறமகள் மருவிய பெருமாளாக மாறுகிறான். ஞான சக்தியாக வேலேந்திய குமரன், கிரியா சக்தியான தெய்வயானையை மணந்த பின், இச்சா சக்தியான வள்ளியையும் மணந்து கொள்கிறான் என்று சொல்லுவது பொருத்தம்தானே?

இந்த வள்ளி பிறந்து வளர்ந்த இடம் தான் வள்ளி மலை. வள்ளிக் கிழங்கு தோண்டி எடுத்த இடத்தில் மகாலக்ஷ்மியின் அவதாரமான மான் வயிற்றிலே பிறக்கிறாள். அதனால் அவளைத் தேடி எடுத்த நம்பிராஜன் என்னும் வேடுவர் தலைவன், அவளை வள்ளி என்றே அழைக்கிறான். இந்த 'வள்ளி படர் சாரல் வள்ளி மலை சென்று, வள்ளியை மணந்து, வள்ளி மணவாளன் ஆகிறான் என்று அருணகிரியார் அறுதியிட்டு உரைக்கிறார்.

இந்த வள்ளிமலை சென்னை மாநிலத்திலே உள்ள வடஆர்க்காடு மாவட்ட எல்லையி லிருந்து எட்டிப் பிடிக்கும் தூரத்திலேதான் இருக்கிறது. சென்னை -பங்களூர் ரோட்டில் பெண்ணையாற்றின் கரையில் உள்ள திருவலம் என்னும் தலத்திலிருந்து வடக்கே பத்து மைல் தொலைவில் இருக்கிற சிறிய ஊர். திருத்தணிகைக்கு நேர் மேற்கே இருபது மைல் தூரத்தில் இருக்கிறது. மிக்க சிரமம் இல்லாமல், நல்ல ரோட்டிலே காரிலோ, பஸ்ஸிலோ இந்தக் கிராமத்திற்குச் சென்று சேரலாம். அடிவாரத்திலே இருக்கும் உற்சவ மூர்த்திகளைக் கண்டு வணங்கலாம்.

'இந்த உற்சவ மூர்த்திகளைக் காணவா இவ்வளவு தூரம் வந்தோம்? ஏதோ வள்ளி பிறந்த ஊர். வள்ளி தினைப்புனம் காத்த தலம் என்றெல்லாம் விஸ்தரித்தீரே!' என்று நீங்கள்