பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. வலம் வந்த விநாயகர்

ஒரு சிறு கதை. அதுவும் பிள்ளையாரைப் பற்றிய கதை. பிள்ளைப் பிராயத்திலே கேட்ட கதையானாலும், வயது முதிர்ந்த பின்னும் திரும்பத் திரும்ப அந்தக் கதையைக் கேட்பதில் ஒரு சுவை, கதை இதுதான்.

கைலாயத்திலே ஒரு நாள் பார்வதியும் பரமேசுவரனும் தனித்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் கலகப் பிரியரான நாரதர் அங்கு வருகிறார். நல்ல மாங்கனி ஒன்றைக் கொண்டு வந்து, அதை இறைவனிடம் அளிக்கிறார் அவர்.

கனி பெற்ற தந்தையும் தாயும் கனிவோடே தங்கள் பிள்ளைகளை நினைக்கின்றனர். தங்களை விடப் பிள்ளைகள் சுவைத்து உண்பார்களே என்றுதானே தாயும் தந்தையும் கருதுவார்கள். உலகீன்ற அன்னையும் அத்தனும் அப்படி நினைத்ததில் வியப்பில்லையே,

இந்தச் சமயத்தில் பிள்ளைகள் இருவரும், ஆம்! பிள்ளையாரும் முருகனுந்தான் குதித்துக் கொண்டே அங்கு வந்து சேருகின்றனர்.

குழந்தைகளைக் கண்டதும் சிவபெருமானுக்கு இவர்களுக்குள் ஒரு விளையாட்டுப் போட்டி நடத்தலாமே என்று தோன்றுகிறது. உடனே அன்னை கையிலிருந்த அரிய கனியைக் காட்டிக் குழந்தைகளிடம், 'உங்களுக்குள் ஒரு பந்தயம். யார் முதலில் உலகைச் சுற்றி வருகிறீர்களோ, அவர்களுக்கே இந்தக் கனி!' என்று கூறுகின்றார்.

பந்தயம், போட்டி என்றாலே குழந்தைகளுக்கு ஓர் உற்சாகம். ஆதலால் தெய்வக் குழந்தைகளான பிள்ளையாரும் முருகனும் போட்டிக்குத் தயாராகி விடுகின்றனர். முருகன் நினைக்கிறான்: 'அண்ணன் அவரது மூஷிக வாகனத்தில் ஏறி, அவனியைச் சுற்றுவதாவது! அதற்கு