பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

வேங்கடம் முதல் குமரி வரை

எவ்வளவு காலம் ஆகும்? நம்மிடபோ லான வீதியலே பறக்கும் மயில் வாகனம் இருக்கிறது. ஆதலால் மாநிலம் மாத்திரம் என்ன, இந்த அண்ட கோளங்கள் அத்தனையுமே அரை நொடியில் சுற்றி வந்து விடலாமே. போட்டியில் வெற்றி நமக்குத்தான்!' என்று.

பிள்ளையாரோ ஒன்றும் பேசாமல் அமுத்தலாக இருக்கிறார்.

போட்டி ஆரம்பமாகி விடுகிறது. உடனே முருகன் தன், 'சீர்திகழ் தோகை மயில்' மீது ஏறி, வான வீதியிலே பறந்து, உலகத்தையே சுற்றப் புறப்பட்டு விடுகிறான். அவன் புறப்படும் வரை பிள்ளையார் இருந்த இடத்தை விட்டு. அசையவே இல்லை. பின்பு சாவதானமாகத் தன்னுடைய வாகனத்தில் ஏறி, ஜம் என்று சவாரி செய்து கொண்டே, அங்கு வீற்றிருந்த தந்தையையும் தாயையும் ஒரு சுற்றுச் சுற்றுகிறார். சுற்றிவிட்டுத் தந்தை முன் வந்து மாங்கனிக்குக் கையை நீட்டுகிறார்.

'என்னடா இது?' என்று கேட்டால், ' உலகம் தோன்றி நின்று ஒடுங்குவதெல்லாம் உங்களிடம்தானே. ஆதலால் உங்களைச் சுற்றினால் உலகத்தையே சுற்றியதாகாதா?'என்று எதிர்க் கேள்வியே போடுகிறார் பிள்ளையார்.

அவ்வளவுதான். தந்தையும் தாயும் வாயடைத்துப் போய் விடுகிறார்கள். போட்டிப் பரிசாகிய மாங்கனியைத் தட்டிக் கொண்டு, நிற்காமல் கொள்ளாமல் தன்னுடைய வாகனத்தில் ஏறிக் கொண்டு, ஓடியே விடுகிறார் அவர். தம்பி வந்து பழத்தில் பங்கு கேட்பானே என்ற பயமோ என்னவோ?

உலகெலாம் சுற்றி அலுத்த முருகன் வந்து விஷயம் அறிந்து , தளர்வடைகிறான், தந்தை தாயிடம் கோபித்துக் கொண்டு, கோவணாண்டியாகப் புறப்படுகிறான். தாயாகிய பார்வதி தன் குழந்தையை எடுத்து மடிமீது இருத்தி, 'அப்பா! நீயே பழமாக