பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

வேங்கடம் முதல் குமரி வரை

தென்னரங்கம் என்னும் திரு ரங்கம் (ஸ்ரீரங்கம்) ஆம். அவன் 'தென் சொல் கடந்தான் என்றாலும் வட சொற் கலைக்கு எல்லை தேர்ந்தவன்' ஆயிற்றே. சமீபத்தில் மகா சம்ப்ரோக்ஷணம் செய்து பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்க நாதனை எல்லோரும் அறிவோம். இன்று நாம் காலாப் போயேதும் அவனை அல்ல. உத்தர ரங்கநாதனை. எல்லா இடத்திலும் அவன் பள்ளிகொண்ட பரந்தாமனாகவே இருந்தாலும், இந்தத் தலம் ஒன்றிலேதான் அவன் பள்ளி கொண்டான் என்ற பெயரோடு விளங்குகின்றான். இந்தப் பள்ளி கொண்டான் கோயில் கொண்டிருக்கும் தலமே பள்ளி கொண்டான் (பள்ளி கொண்டை என்று மக்கள் அழைத்தாலும்) என்று பெயர் பெற்றிருக்கிறது.

இந்தப் பள்ளி கொண்டான் வட ஆர்க்காடு மாவட்டத்திலே பாலாற்றின் கரையிலே உள்ள ஒரு சிறிய ஊர். இங்கு வந்து இவன் பாயை விரித்துப் பள்ளி கொள்வானேன்?

இதைத் தெரிந்துகொள்ள உத்தர ரங்க மகாத்மியத்தையே ஒரு புரட்டுப் புரட்ட வேண்டியதுதான். புரட்டினால் கிடைக்கும் ஒரு கதை.

மாமியார் - மருமகள் சண்டை உலகம் தோன்றுவதற்கு முன்னமேயே தோன்றியிருக்கிறது. செல்வம் கொழிக்கும்