பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. வாழ்வுக்கு ஒரு வழித் துணை

சில வருஷங்களுக்கு முன் நான் கும்பகோணத்துக்கு வடமேற்கே பதினான்கு மைல் தொலைவில் உள்ள திருப்பனந்தாளுக்குச் சென்றிருந்தேன். என்னுடன் இலக்கிய நண்பர் ஒருவரும் வந்திருந்தார். அவருக்குக் கோயில், குளம், மூர்த்தி, தலம் என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என்றாலும் என்னுடன் வந்தால்தமிழ்நாட்டின் கலை அழகைக் காணக்கூடும் என்ற நம்பிக்கை.

இருவரும் அங்குள்ள தாடகேச்சுரம் என்ற கோயிலுக்குச் சென்றோம். அங்குள்ள சடையப்பர் சந்நிதிக்கே வந்தோம். சந்நிதியில் வணங்கி எழுந்ததும், இத்தலத்தைப் பற்றி இரண்டு கதை இருக்கிறது, தெரியுமா?’ என்றேன். 'என்ன? சொல்லுங்கள்,' என்றார்.

தாடகை என்று ஒரு பெண் (இராமாயணத்தில் வரும் தாடகை அல்ல) நல்ல சிவநேசச் செல்வி. அவள் இந்தத் தலத்தில் இறைவழிபாட்டுக்கு உரிய புஷ்பக் கைங்கர்யம் செய்து வருகிறாள். ஒரு நாள் கட்டிய மாலையோடு இறைவனை அணுகும்போது மேலாக்கு நழுவியிருக்கிறது. அதைச் சரி செய்ய மாலையையே கீழே வைக்க வேண்டியிருக்கும். இந்த நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறாள் அவள்.

அப்போது இறைவனே அவளது இக்கட்டான நிலையை உணர்ந்து, தம் தலையையே சாய்த்து மாலையை ஏற்றிருக்கிறார். அன்று சாய்த்தவர் தலையை நிமிர்க்கவில்லை. இதனால் ஏதாவது உத்பாதம் விளையுமோ என எண்ணி, அந்த நாட்டு அரசன் சாய்ந்த தலையை நிமிர்த்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறான். யானை சேனை யெல்லாம் கொண்டு கயிறு கட்டி இழுத்துப் பார்த்திருக்கிறான். இறைவன்