பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

வேங்கடம் முதல் குமரி வரை

இறைவன் முடியைக் கண்டுவிட்டதாகவும் அதற்கு இறைவன் முடியில் உள்ளதாழம்பூவே சான்று என்றும் கூறுகிறார்.

பொய் சொல்லிய பிரமனைப் பூவுலகில் மனிதனாகப் பிறக்கும்படி சபிக்கிறார், இறைவன். அந்த விரிஞ்சனே இந்த விரிஞ்சிபுரத்தில் சம்பு சருமர் என்ற கோயில் அர்ச்சகருக்கும் நயனநந்தினி என்பவளுக்கும் மகனாய்ப் பிறக்கிறான். சிவசருமன் என்ற பெயரோடு வளர்கிறான்.

சிவசருமனுக்கு ஐந்து வயது நிறையுமுன்னே, சம்புசருமன் இறைவன் திருவடி சேர்கிறான். கோயில் பூஜை செய்யும் உரிமையைக் கைப்பற்றத் தாயாதிகள் விரைகின்றனர் சிவசருமன் சிறுவன் என்ற காரணத்தால். ஆனால் இறைவன் அளப்பரிய கருணை உடையவன் ஆயிற்றே. வழித்துணை நாதனான அவன் வழிகாட்டாமல் கை விடுவானா?

கார்த்திகை மாதம் கடைசிச் சனிக்கிழமை இரவு சிவசருமன் தாயின் கனவில் தோன்றி, மறுநாட்காலையில், சிவசருமனைக் கோயிலுக்கு அனுப்பி வைக்கச் சொல்கிறான், இறைவன். விருத்த வேதிய வடிவில் சிவபெருமானே வந்து, சிவசருமனுக்கு உபநயனம் எல்லாம் செய்து வைக்கிறான். பின்னர் கோயிலுள் நுழைந்து பூஜா கைங்கர்யங்களை எல்லாம் தவறுகள் செய்யாமலேயே நிறைவேற்றுகிறான். கடைசியில் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய, மங்கள கலசத்தையே தன் கைகளில் எடுக்கிறான்.

நீண்டு உயர்ந்திருந்த லிங்கத்திருவுருவின் முடி பாலகனான சிவசருமனுக்கு எட்டவில்லை. ‘என்ன சோதனை? அன்றுதான் உன் திருமுடியைக் காணவில்லை. இன்றும் எனக்கு எட்டவில்லையே! என்று கதறுகிறான், பழைய விரிஞ்சனான புதிய சிவசருமன். அவ்வளவில் அன்பினால் கட்டுண்ட இறைவன், அவன் தனக்கு அபிஷேகம் செய்யத் தன் தலையையே வளைத்துக் கொடுக்கிறான். அவனது