பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

வேங்கடம் முதல் குமரி வரை

பழமொழி. மதிலில் ஒரு வரிசை நல்ல சிற்ப வடிவங்கள் அமைந்துள்ளன. மலைநாட்டு வணிகராய்ச் சிவபெருமான் பொதிமாடுகளுடன் செல்லும் காட்சி, ராமர் வாலியை மறைந்து நின்று அம்பெய்து வீழ்த்தும் நிலை எல்லாம் சிற்பிகளால் உருவாக்கப் பெற்றிருக்கின்றன. ராஜ கோபுரத்தைக் கடந்து கோயிலுள் நுழைந்தால், முன்னால் பார்த்த சிம்மக் குளம் வந்து சேருவோம். சிம்ம உருவில் வாயில் அமைத்துக் கட்டப் பட்டிருப்பதால், சிம்மக் குளம், சிம்ம தீர்த்தம் எனப் பெயர் பெற்றிருக்கிறது. இதனை அடுத்துள்ள மண்டபத்தைக் கடந்துதான் உள் பிராகாரம் செல்ல வேணும். அதையும் கடந்துதான் அர்த்த மண்டபம், கர்ப்ப கிருஹம் எல்லாம். கோயில் பிராகாரத்திலே இரண்டு பிரசித்தி பெற்ற மண்டபங்கள், தென் பகுதியில் கல்யாண மண்டபம், வட பக்கத்தில் வசந்த மண்டபம்.

இரண்டு மண்டபங்களிலும் உள்ளதுண்களில் எண்ணிறந்த சிற்ப வடிவங்கள், தசாவதாரக் காட்சிகள், சிவபெருமானது பல மூர்த்தங்கள், பஞ்சமுக விநாயகர் முதலிய எண்ணற்ற வடிவங்களைக் கண்டு மகிழலாம், இந்த மண்டபங்களிலே. வேலூர் ஜலகண்டேசுவரர் கோயில் கல்யாணமண்டபம் கட்டிய சின்னப் பொம்ம நாயக்கன் - பெரிய பொம்ம நாயக்கன் என்பவர்களே இம் மண்டபங்களையும் கட்டியிருக்க வேண்டும்.

இக்கோயிலுக்கும் பக்தி சிரத்தை உள்ளவர்கள் கடை ஞாயிறு காலையிலேயே சென்று வணங்கலாம். இல்லை, கூட்டம் என்றாலே எனக்குப் பிடிக்காது என்று சொல்லுபவர்கள், என்றைக்காவது வசதியான ஒருநாளில்சென்று, கோயில், கோபுரம், சிம்மக்குளம், தலை தாழ்த்திய மார்க்க சகாயர். மரகதவல்லி முதலியோரைக் கண்டு வணங்கலாம். செப்புச் சிலை வடிவில் இருக்கும் மரகதவல்லி உண்மையாகவே அழகு கொஞ்சும்பச்சைப் பசுங்கொடி. ஞாயிறு காலை கோயிலுக்குச் சென்று