பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

83

ஜலகண்டேச்வரர் கோயில்

என்றே வியக்கிறார், மணிவாசகர். இந்தப் பாட்டைப் பாடிக் கொண்டே வேலூர் சென்ற எனக்கு, இன்னும் என்ன என்னவோ அதிசயங்கள் அங்கே காத்துக் கிடந்தன. நீர் இல்லாத ஆறும், மரங்களே இல்லாத மலையும், கோமகன் இல்லாத கோட்டையும், அதிகாரம் இல்லாத போலீசும் (இன்னும் மற்றவற்றையும் சொன்னால் வேலூர் மக்கள் கோபித்துக் கொள்வார்களே!) என்று அதிசயங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள் அங்கு இருப்பவர்கள்.

இத்தனை அதிசயங்களையும் தூக்கி அடிக்கும் வகையில், அங்குள்ள கோட்டைக்குள்ளே கோயில் உண்டு. ஆனால் மூர்த்தி இல்லை. தமிழ் நாட்டில் இப்படி எத்தனையோ கோயில்கள் இடிந்து பழுதுற்றுக் கிடக்கின்றன. என்றாலும் அந்த இடிந்த கோயில்களுக்கு உள்ளே கூட ஒரு மூர்த்தி நின்று கொண்டிருக்கும், பூசை புனஸ்காரம் இல்லாமல். ஆனால் மூர்த்தி இல்லாக் கீர்த்தியை உடைய கோயில் இந்த வேலூர் ஜலகண்டேச்வரர் கோயில் ஒன்றுதான்.

ஜலகண்டேச்வரர் ஜாதகம் நிறையக் கண்டங்கள் நிறைந்த ஜாதகம். ஏரிக்கு நடுவிலே ஒரு தீவு. அந்தத் தீவிலே ஒரு புற்று. அந்தப் புற்றிடத்திலே ஒரு சிவலிங்கம். அந்தச் சிவலிங்கத்தைச் சுற்றி ஒரு ஐந்து தலை நாகம். அந்த நாகத்திற்குப் பாலருத்துகிறது ஒரு பசு. இவை யெல்லாம் அறிந்த அந்த