பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

87

குண்டலத்து அழகும், தலையில்
வெண்மதியும், குரைகழல்
சிலம்பும், நன்னுதலில்
புண்டரத்து அழகும், பொருப்பன
மார்பில் புனை தலை
மாலையின் சிறப்பும்
கண்டு அகமகிழ்ந்து களிக்கும் நாள்
உளதோ? கருணைசேர்
ஜலகண்டேச்வரனே!

என்று பாடுகிறார் இன்றைய கவிஞர் ஒருவர். அதுவேதான் வேலூர் வாசிகளின் பிரார்த்தனையும், ஏன், தமிழ் மக்கள் பிரார்த்தனையும் அதுதானே.

வேலூர் ஜலகண்டேச்வரர் கோயில் மிகவும் அழகான கோயில். கோயில், கோயிலைச் சுற்றியிருக்கும் கோட்டை,

கல்யாண மண்டபம்

கோட்டையைச் சுற்றியிருக்கும் அகழி எல்லாம் விஸ்தqரமqக அமைந்தவை. கோயில் வாசலில், ராஜ கோபுரத்துக்கும் வெளியே நிற்கிறர்கள், துவார பாலகர்கள் இருவர். ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், பெரிய வெளிப் பிராகாரம்.

அந்தப் பிராகாரத்திலே, தென் பகுதியிலே உலகப் பிரசித்தி பெற்ற கல்யாண மண்டபம். மண்டபம் முழுவதும் ஒரே