பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

89

விதானம் கல்யாண மண்டபம்

 கப்பலில் ஏற்றி எடுத்துச் சென்று, பிரைட்டன் நகரிலே திரும்பவும் மண்டபத்தை ஒன்றித்து விடுவது என்பது அவனது திட்டம். அதற்கென்று ஒரு பெரிய கப்பலையே கொண்டுவரச் செய்திருக்கிறான் லண்டனிலிருந்து.

ஆனால் ஜலகண்டேச்வரர், எவ்வளவு தான் அந்தர்யாமியாக இருந்தாலும், தனக்கும் தன் துணைவி அகிலாண்டேஸ்வரிக்கும் விதானம் கல்யாண மண்டபம் திருமணம் நடத்தப் பொம்மி ரெட்டி கட்டிய கல்யாண மண்டபத்தை இழந்துவிட விரும்பவில்லை. என்ன பண்ணினாரோ, ஜலத்திலேயே ஒரு கண்டம் கப்பலுக்கு நேரும்படி செய்திருக்கிறார். கடலில் மிதந்த கப்பல் மூழ்கி இருக்கிறது. மண்டபம் பெயர்வது தடைப்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் பண்ணிய புண்ணியவசமாக எவ்வளவோ ஜாதகக் கோளாறு உடையதுதான் இந்தக் கோயில் என்றாலும், இங்கேயே நிலைத்து நிற்கிறது மண்டபம்.

கல்யாண மண்டபத்தைப் பார்த்த பின், வேறு ஒன்றையுமே பார்க்கத் தோன்றாது நமக்கு. பார்க்க வேண்டியதும் அதிகம் இல்லைதான். என்றாலும் கோயிலின் உட்பிராகாரத்துக்கும் செல்லலாம். ஜலகண்டேச்வரரும் அவரது துணைவி அகிலாண்டேஸ்வரியும் கோயில் கொண்டிருந்த (ஆனால் அந்தச் சுவடே இல்லாமல் காலியாய்