பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேங்கடம் முதல் குமரி வரை
(பாகம் - 3)

- காவிரிக் கரையிலே -

1. குடந்தைக் கும்பேசுரர்

'லண்டன் டைம்ஸ்' பத்திரிகையோடு தொடர்புடைய ஆங்கிலேயர் ஒருவர் இந்தியாவுக்கு வருகிறார், கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன்பு. தூத்துக்குடியில் கப்பலில் இறங்கி மதுரை எல்லாம் கடந்து 'மெயில் ரயிலிலே' சென்னைக்குப் பிரயாணம் செய்கிறார் முதல் வகுப்பிலே. அந்த முதல் வகுப்புப் பெட்டியிலே ஒரு தமிழ்ப் பிரமுகரும் பிரயாணம் செய்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ளவில்லை. இரவு பத்துப் பதினோரு மணிக்கு ரயில் தஞ்சையைக் கடந்து செல்கிறது. தமிழ்ப் பிரமுகர் கும்பகோணத்தில் இறங்கி விடுகிறார். ஆங்கில நண்பரோ சென்னை செல்கிறார். சென்னை எழும்பூர் சென்றதும் பார்த்தால், கும்பகோணத்தில் இறங்கியவர் தம் பெட்டியை ரயிலில் விட்டுவிட்டு, ஆங்கிலேயரது பெட்டியை எடுத்துக் கொண்டு நடந்திருக்கிறார். அவர் வேண்டுமென்று செய்திருக்கமாட்டார். ஏதோ பெட்டிகள் ஒரே விதமான பெட்டிகளாக இருந்திருக்க வேண்டும். பெட்டிகள் மாறிவிட்டன. ஆங்கிலேயர் தம் பெட்டியைப் பெற எவ்வளவோ முயன்று பார்த்தார்; கிடைக்கவில்லை. இந்த ஏமாற்றத்துடனே தம் தாய்நாட்டுக்குத் திரும்பினார். லண்டன் சென்று சேர்ந்ததும், 'கும்பகோணம் பிஸினஸ்' என்ற தலைப்பிலே