பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

வேங்கடம் முதல் குமரி வரை

செய்துவிட்டுத் திரும்பலாம் நாம். வரும் வழியிலே தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் பெரிய நாயகியையும் வணங்கலாம்.

அவகாசம் இருந்தால், பிராகாரங்களில் உள்ள மற்றச் சுற்றுக் கோயில்கள் அங்குள்ள மூர்த்திகளையும் கண்டு தரிசிக்கலாம் இக்கோயில் வாயிலிலிருந்து வடக்கே வந்து மேற்கே திரும்பி நடந்தால், ஒரு சிறு கோபுர வாயிலில் கொண்டு வந்து விடும். இதுதான் ஏழைச் சோமேசர் கோயில். இவர் ஏழை என்பதைக் கோயில் தெற்குச் சுவரில் உள்ள விளம்பரங்களே சொல்லும். இங்கு காணவேண்டிய கலை அழகுகள் ஒன்றும் இல்லைதான். இங்குள்ள சோமேசர், தேனார் மொழியாள் இருவரையும் வணங்கி விட்டு இன்னம் மேற்கு நோக்கி நடந்து இடையில் உள்ள பொற்றாமரைக் குளத்தையும் கடந்தால் இத்தலத்தின் பிரதான சிவன் கோயிலான கும்பேசுரர் சந்நிதிக்கு வந்து சேரலாம். பெரிய கோயில். ஆண்டவன் கும்பவடிவிலே லிங்கத் திருவுருவாக அமைந்திருக்கிறார். இவருக்குத் தங்கக் கவசம் சாத்தியே அபிஷேகம் முதலியன நடக்கின்றன. உடைந்த கும்பத்தின் துண்டுகளைச் சேர்த்து அமைக்கப்பட்ட திருஉருவந்தானே.

இங்குள்ள அம்பிகை மந்திர பீடேசுவரி மங்களாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். வணங்குபவர்களுக்குச் சர்வ மங்களத்தையும் அளிக்க வல்லவள் என்று நம்பிக்கை. அம்பாள் சந்நிதிக்கருகில் வேட வடிவங்கொண்ட சிவபெருமான் வேறே எழுந்தருளியிருக்கிறார். இவருக்குப் பூஜை முதலியன நடைபெறுகின்றன. இக்கோயில் துவஜ ஸ்தம்பத்துக்கு அருகில் லக்ஷ்மி நாராயணப் பெருமானும் இடம் பிடித்து உட்கார்ந்திருக்கிறார். இங்குள்ள சிலா உருவங்களில் அழகானது வீரபத்திரன் திருக்கோலம். சிவனை அவமதித்த தக்ஷனைத் தன் காலால் மிதித்து மடக்கித் தலை கொய்யும் வீரபத்திரனின் நிலை அச்சம் தருவதொன்று. ஆனால் ஐயகோ! வீரபத்திரனின் கையிரண்டும் பின்ன