பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

9

முற்றல்லவா கிடக்கிறது. சம்பந்தர் காரோணத்தாரை மட்டும் பாட, அப்பர் கீழ்க் கோட்டாத்தாரை மட்டும் பாட, இந்தக் கும்பேசுரர் மட்டும் இருவராலும் பாடப் பெற்றிருக்கிறார். அதிர்ஷ்டக்காரர்தான்,

நங்கையாள் உமையாள் உறைநாதனார் அங்கையாளோடு அறுபதம் தாள்சடைக்
கங்கையாள் அவள் கன்னி எனப்படும்
கொங்கையாள் உறையும் குடமூக்கிலே

என்பதுதான் அப்பர் தேவாரம். -

இத்தலத்தில் இப்படிப் பாடப்பெற்ற மூவர் மாத்திரமே இருக்கிறார்கள் என்றில்லை. இன்னும் அபிமுகேசுரர், ஆதி விசுவேசுரர், பாணபுரி ஈசுவரர், காளகஸ்திநாதர், ஏகாம்பர நாதர் எல்லோருமே இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே மகாமக ஸ்நானத்துக்கு வந்தவர்கள் போலும். இனி, இத்தலத்தில் உள்ள விஷ்ணு கோயிலைக் காணப் புறப்படலாம்.