பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

15

பேரானைக் குடந்தைப்
பெருமானை, இலங்குஒளி
வாரார் வனமுலையாள்
மலர் மங்கை நாயகனை,
ஆரா இன்னமுதை,
தென் அழுந்தையில் மன்ளிநின்ற
காரார் கருமுகிலைக்
கண்டு களித்தேனே.

என்று எக்களிப்போடு பாடுகிறார். இந்த ஆரா அமுதனையும் அவனது துணைவியாம் கோமளவல்லியையும் தொழுதபின்பு அங்குள்ள மற்ற சந்திதிகளிலும் வணங்கி எழலாம். பெரிய கோயில்தான் என்றாலும் குறிப்பிடத்தக்க சிற்பச் செல்வங்கள் ஒன்றுமே இங்கு இல்லை என்றுதான் கூற வேண்டியிருக்கிறது.

சாரங்கபாணியைப் பார்த்த விறுவிறுப்பிலே கொஞ்சம் வடக்கு நோக்கி நடந்து சக்கரபாணியையும் வணங்கி விடலாம். சக்கரபாணி கோயில் காவிரியின் தென்கரையில் இருக்கிறது. மாடக் கோயில் அமைப்பு. ஒரு சிறிய கட்டுமலை மேல்தான் சந்நிதி இருக்கிறது. சுதர்சன சக்கரம் என்று பெருமாள் ஏந்தியிருக்கும் சக்கரத்துக்குள்ளேயே எழுந்தருளி யிருக்கிறார். உற்சவ விக்கிரகம் உக்கிரமானதாகவே இருக்கும். இச் சக்கர பாணியைப் பற்றி வேறு விரிவாகச் சொல்ல ஒன்றும் இல்லை. ஆனால் சிவனுக்கு நாகேசுரர் கோயில் என்று ஒரு கலைக்கோயில் அமைந்ததுபோல் பெருமாளுக் கும் ஒரு கலைக்கோயில் தான் ராமசாமி கோயில். கும்பேசுரர் கோயிலுக்கும் சாரங்கபாணி கோயிலுக்கும் இடையே உள்ள வீதி வழியாய்க் கண்ணை மூடிக்கொண்டு தெற்கு நோக்கி நடந்தால் ராமசாமி கோயில் வந்து சேருவோம்.

கோயில் பழைய கோயில் அல்ல. பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேதான் எழுந்திருக்க வேண்டும். ராமன், சீதா லக்ஷ்மண பரத சத்துருக்கன ஆஞ்சநேய