பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருக்கிறான் அனுமன், பரதன், சத்துருக்கனன், லக்ஷ்மணன் எல்லோரும் நிற்கிறார்கள். இவர்களுடன் கோலாகலமாக நிற்கிறான் ராமன். நிறையப் பட்டும் பட்டாடையுமாக, அணிபல அணிந்து நிற்பார்கள் இவர்கள், அணிகளையும் ஆடைகளையும்களைந்து பார்த்தால் செப்புச் சிலை வடிவின் அழகெல்லாம் தெரியும் அதற்குக் காலமும் நேரமும் இடந்தராதே. ஏதோ சாரங்கபாணியாம் ஆரா அமுதனைக் காணும் விருப்பத்தோடு வந்த நமக்குச் சக்கரபாணியையும், கோதண்டபாணியையும் கண்டு தரிசிக்கக் கொடுத்து வைத்திருந்ததே, அந்தப் பாக்கியத்தைத் எண்ணிக் கொண்டே குடந்தையை விட்டுக் கிளம்பலாம் வீடு நோக்கி.