பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

21

அப்பா! நீ குருவாகவும் நான் சீடனாகவும் இருந்து கேட்கிறேன்' என்று சொன்னவர் அல்லவா? இப்படி மகன் குருவாகவும், தந்தை சீடனாகவும் அமைந்த கதை ரஸமான ஒன்று. கதை இதுதான், சிருஷ்டித் தொழில் செய்கிறவன் பிரமன். அவன் குமரனைச் சிறு பிள்ளை தானே என்று மதிக்காமல் நடக்கிறார். குமரனோ பிரமனை அழைத்து, பிரவணப் பொருளுக்கு உரை கேட்கிறான். பிரமன் விழிக்கிறான். உடனே குமரன் பிரமனைக் குட்டிச் சிறையிருத்தி விட்டுத் தானே சிருஷ்டித் தொழிலை நடத்துகிறான்.

இதை அறிகிறார் சிவபெருமான். குமரனை அழைத்து, பிரமனைச் சிறையில் அடைத்ததற்குக் காரணம் கேட்கிறார். 'அவனுக்குப் பிரணவப் பொருள் தெரியவில்லை. அவனை வைத்து என்ன பண்ணுவது?' என்கிறான். இறைவனோ 'அப்போ உனக்குத் தெரியுமா? என்கிறார். 'ஓ! தெரியுமே' என்கிறான் குமரன். 'அதைச் சொல்லு, பார்ப்போம்' என்று கேட்கிறார். ஓ! உமக்குமே தெரியாதா? அதைத் தெரிய வேண்டுமானால் நீர் முறைப்படி சீடனாக அடங்கி நின்று கேட்டால் சொல்லுவோம்' என்கிறான். அப்படியே நின்று கேட்கிறார். முருகனும் பிரணவப் பொருளை இறைவனாகிய தந்தைக்கு உபதேசிக்கிறான். இப்படித்தான் சாமிக்கும் நாதனாக அமைந்து அந்தச் சாமிநாதன் குருமூர்த்தியாக, ஞானப் பண்டிதனாக இருந்தருளுகிறான். இந்தச் சாமிநாதனைக் கண்டு தொழுது, நாமும் பிரணவப் பொருள் தெரிந்து கொள்ள - விரும்பினால் சுவாமிமலைக்குச் செல்லவேண்டும் அந்தச் சுவாமிமலை என்னும் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

சுவாமிமலை தஞ்சை ஜில்லாவில் கும்பகோணத்துக்கு மூன்று மைல் தொலைவில் உள்ள சிறிய ஊர். கும்பகோணத்தில் இறங்கி, கும்பகோணம் - திருவையாறு ரோட்டில் மூன்று

வே.மு.கு.வ - 3