பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

23

என்ன புண்ணியம் செய்தனை
நெஞ்சமே! இருங்கடல் வையத்து
முன்னம் நீ புரி நல்வினைப்
பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு
வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும் -
வழிபடும் அதனாலே!

என்று பாடியிருக்கிறார். நாமும் என்ன என்ன புண்ணியம் செய்திருக்கிறோமோ, வலஞ்சுழி வாணனையும் அவனுக்கும் முந்தி வாயில் முகப்பிலேயே வரவேற்கும். வெள்ளை விநாயகனையும் கண்டு தொழ? இனிமேல் நடக்கலாம் சோமசுந்தரனையும் முந்திக்கொண்டு குரு மூர்த்தியாக நிற்கும் சாமிநாதனைக் காண. போகும் வழியிலே அரசிலாறு காவிரியை எல்லாம் கடக்கவேண்டும், காவிரியையும் அதில் ஓடும் தண்ணீரையும் கண்டால் ஒரு முழுக்குப் போடத் தோன்றும். ஆதலால் காவிரியில் இறங்கி ஒரு முழுக்குப் போட்டுவிட்டு மேலும் நடந்தால், தெற்கு வீதியில் உள்ள கோயில் வாயிலை வந்து அடையலாம்.

கோயிலின் சந்நிதி வாயில் அது அல்ல. கீழ்ப் புறம்தான். ஆனால் அது எப்போதும் மூடியே வைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து கோயிலைப் பார்த்தால் ஏதோ ஒரு பங்களா மாதிரி இருக்குமே தவிர கோயிலாகத் தெரியாது. அதனால் தான் இந்தத் தெற்கு வாயிலில் சுவாமிநாதன்