பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

25

பிரபவ முதலிய அறுபது வருஷங்களை அவை குறிப்பிடுகின்றன. பாதிப்படிகளை ஏறிக் கடந்ததும் ஒரு திறந்த வெளிப் பிரகாரம் இருக்கும். அதைச் சுற்றிக்கொண்டு கீழ்ப்புறம் உள்ள மண்டபத்துக்கு வந்து கிழக்கே திரும்பினால் அதற்கும் கொஞ்சம் கிழக்கே சுதையால் செய்யப்பட்ட சிற்ப வடிவங்கள் தெரியும். இதற்கு வாயில் ஒன்று அமைத்து அதைப் பூட்டி வைத்திருப்பார்கள். செல்கிறவர்கள் செல்வாக்கு உடையவர்கள் என்றால் ஆள் அனுப்பிச் சாவி பெற்றுக் கதவைத் திறந்து அங்குள்ள சிற்ப வடிவங்களைக் காணலாம்.

சிவபெருமான் மடிமீதிருந்து சாமிநாதன் தந்தைக்குப் பிரணவப் பொருள் உபதேசிக்கிறார். பிரம்மாவும், விஷ்ணுவும் அடக்க ஒடுக்கமாக நிற்கிறார்கள். முன்னர் அங்கிருந்த சுதை வடிவில் சாமிநாதன் கால்மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பதாகவும், சிவபிரான் அவன் காலடியில் கைகட்டி வாய் பொத்தி நின்று உபதேசம் கேட்பதாகவும் அமைந்திருந்தது. இப்போதுள்ள நிர்வாகிகள் உட்கார வைத்து அவர் மடியில் சாமிநாதனை இருத்தியிருக்கிறார்கள் (அவர்கள் பக்திக்கு நான் கோயில் வாயில் தலை வணங்குகிறேன்). ஆனால் தந்தையே மகனைக் குருமூர்த்தி என்று ஒப்புக் கொண்டபின், அந்தச் சாமிநாதன் காலடியில் இறைவன் நின்று உபதேசம் கேட்பதுதான் சரி என்றுபடுகிறது எனக்கு; உங்களுக்கு என்ன படுகிறதோ? இந்தச் சாமிநாதனைப்