பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வேங்கடம் முதல் குமரி வரை

பார்த்தபின் இன்னும் படி ஏறினால், நாம் தெற்கு நோக்கி இருக்கும் நேத்திர விநாயகர் சந்நிதி வந்து சேருவோம். இவரையே கண் கொடுத்த விநாயகர் என்பர். கொங்கு நாட்டுப் பிறவி குருடன் ஒருவன் வந்து வணங்கியபொழுது அவனுக்குக் கண் திறந்து வைத்தவர் ஆனதால் அவரைக் கண் கொடுத்த விநாயகர் என்று தலவரலாறு கூறுகிறது. -

கொங்கு நாடு மாத்திரம் என்ன, ஏனைய தமிழ்நாட்டுப் பகுதிகளிலும் கண்ணிருந்தும் குருடர்களாய் இருப்பவர்கள் எத்தனை பேர்? அத்தனை பேரும் கண் பெறவேண்டுமானால் (ஊனக் கண்ணையல்ல-ஞானக் கண்ணையே) சென்று வணங்க வேண்டுவது இந்த நேத்திர விநாயகரையே. அவரை வணங்கி விட்டுக் கோயிலுள் நுழைந்து மகா மண்டபத்துக்குள் வந்து நின்றால் கருவறையில் கம்பீரமாக நிற்கும் சுவாமிநாதனைக் கண்குளிரக் காணலாம்.

'சிவனார் மனம் குளிர உபதேச மந்திர மிகு, செவிமீதினும் பகர்செய் குருநாதன்' கோவணாண்டியாகத் தண்டேந்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அவரது சந்நிதியில் வழக்கமாக இருக்கும் மயில் இல்லை. தேவேந்திரன் வழிபட வந்தபோது தன் ஐராவதத்தையே நிறுத்தி விட்டுப் போயிருக்கிறான். சாமிநாதன் நல்ல ஆறு அடி உயரத்தில் உள்ள ஆஜானுபாகு. உயர்ந்த பீடத்திலே ஏறி நின்று கொண்டிருக்கிறார். முருகன் சிலைவடிவில் இவ்வளவு உயரமாக இருப்பது இங்குதான். இவனைவிட நீண்டு உயர்ந்து நிற்பவன் ஒருவன்