பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

27

இன்றையக் கன்னியா குமரி மாவட்டத்திலே உள்ள குமார கோயிலில் நிற்கிறான் என்பர். இப்படி ஆண்டியாக நிற்பவனை அழகொழுகும் ஆணழகனாக 'எல்லாம் அலங்காரம் பண்ணுவர். அதிலும் ‘ராஜ கம்பீர நாடாளும் நாயகனாக' அலங்காரம் பண்ணிப் பார்த்தால் நமது இதயம் குளிரும். ஏதோ அவன் ஆண்டிபோல வேஷமிட்டாலும் நல்ல நிறைந்த செல்வந்தனே. தங்கக் கவசம், கிரீடம், வைரவேல் எல்லாம் உடையவன்தான். ஆம் அத்தனையையும் உதறிவிட்டு ஆண்டியாக மாறி நின்றே, நாம் கேட்பதையெல்லாம் நமக்கு வாரி வாரிக் கொடுக்கிறான். அவன் நம்மிடம் கேட்கும் குருதக்ஷிணை கொடுப்பதில் நாம் ஏன் பிந்த வேண்டும்? இந்தச் சாமி நாதனை அருணகிரியார் கசிந்து கசிந்து பாடியிருக்கிறார், இங்கு அவர் வந்தபோதுதான் சம்பந்தாண்டான் அவரை வாதுக்கு அழைக்கிறான். அவரும் சாமிநாதன் அருளால் அவனை வாதில் வென்று வாகை சூடியிருக்கிறார். அவனது திவ்ய பாத தரிசனமும் கண்டிருக்கிறார்.

தகையாது எனக்கு உன்
அடிகாண வைத்த
தனி ஏரகத்தின் முருகோனே!

என்று பாடிப் பரவி இருக்கிறார்.

வரும்போது மகா மண்டபத்திலே வடக்குச் சுவர்ப் பக்கம் ஒரு பீடத்தில் ‘சபாபதி' என்ற பெயரோடு ஒரு மூர்த்தி நிற்பார், செப்புச் சிலை வடிவில் கேட்டால் மகனாம் குருநாதன் முன்பு காலைத் தூக்கவே அஞ்சி நிற்கிறார் நடராஜர் என்பார்கள். இது தவறு. இவரே பாகுலேய மூர்த்தி. சூர சம்ஹாரம் முடித்துத் தேவ குஞ்சரியை மணம் செய்து கொண்ட கோலத்திலே எழுந்தருளியிருக்கிறார். எடுத்திருப்பது போர்க்கோலம். பக்கத்தில் நிற்பவள் தேவயானை. இந்தக் கோயிலில் வள்ளி தெய்வயானைக்குத் தனி சந்நிதி இல்லை.