பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4. தாராசுரத்து ஐராவதேசுரர்

திருக்குடந்தை மான்மியம் என்று ஒரு புத்தகம். அதில் தாரேச்சுரப் படலம் என்று ஒரு படலம். அப்படலத்தில் ஒரு வரலாறு. தாரன் என்று ஓர் அசுரன். அவன் தேவர்களை அடக்கி ஆள விரும்புகிறான். அதற்குச் சிவபெருமானை நோக்கித் தவம் புரிகிறான். அவன் மாத்திரம் என்ன அவனுடைய மனைவியர் நூறு பேருமே இறைவன் திருவடிகளைப் பூசிக்கின்றனர். அவர்கள் எல்லாம் விரும்பிய சிவலோக வாழ்வை அளிக்கிறார் இறைவனும். பலம் மிக்க அந்தத் தாரன் என்ற அசுரன் பூசித்த தலம் தாரேச்சுரம் என்று பெயர் பெறுவதாயிற்று. தாரன் மாத்திரம் என்ன அவன் மகன் மேகதாரனும் அத் தலத்திலிருந்தே அரசாண்டு சாயுஜ்ஜியம் பெற்றிருக்கிறான் என்று மான்மியம் கூறுகிறது.

ஆனால் சரித்திரம் இதை ஒத்துக் கொள்வதில்லை. தாராசுரம் என்ற பெயர் வந்ததற்குச் சரித்திரம் கூறும் காரணம் வேறு. சோழ மன்னனான இரண்டாம் ராஜராஜன் இங்கிருந்து அரசாண்டிருக்கிறான். அவன் ஆண்ட காலம் 1146 முதல் 1163 வரை பதினோழு வருஷங்கள். அவனே இரண்டாம்