பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

33

பகத்தைக் கண்டு: கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் அவ்வுருவுக்கு மூன்று தலைகள் இருப்பதும் தெரியும். இது என்ன புதிதாக இருக்கிறதே? என்று அர்ச்சகரைக் கேட்போம். அவரும் நம்மைப் போலவே திரு திரு என்று விழிப்பாரே ஒழிய விளக்கம் சொல்ல மாட்டார்.

சிறிது சிந்தித்தால் தேவர் மூவரையும் அவர்களுடன் பராசக்தியையும் சேர்த்து அமைத்துக் காட்டிய விசுவரூபம் என்று தெரியும். இப்படி ஒரு அற்புதமான சிலை வேறு எந்தக் கோயிலிலும் இல்லை. அற்புதம் மாத்திரம் அல்ல; நல்ல அழகான சிலையும் கூட. அந்தச் சிலையின் அழகிலேயே மெய்மறந்து விடாமல் மேலும் நடந்து தெற்கு நோக்கிப் படி ஏறினால் ராஜகம்பீரன் மண்டபம் வந்துசேரலாம். அந்தப் படிக்கட்டு ஏறும்போதே வடக்குச் சுவரில், மூக்குப்போன அகத்தியர், அஞ்சுதலை ஆதிசேஷன் இவர்களின் உருவையும் காணலாம்.

பிறகு ராஜ கம்பீரன் மண்டபத்துத் தூண்களை, சுவரை, விதானத்தையெல்லாம் பார்த்தால் அப்படியே மலைத்து விடுவோம். ஒரு அங்குல இடங்கூட விடாமல் அத்தனை இடத்தையும் சிற்ப வடிவங்களாலேயே நிறைத்திருக்கிறான் ராஜராஜன். நர்த்தன விநாயகரே அவனது முத்திரையாக அமைந்திருக்கிறார். சிற்பிகள் ஒரு அங்குல விநாயகர் முதல், ஒரு முழ விநாயகர் வரை (பலர் நடம் ஆடிக்கொண்டே ) தூண்களை நிறைந்திருக்கிறார்கள். இன்னும் அத்தூண்களில் செதுக்கியிருக்கும் அழகு, அத்தூண்களில் வடித்திருக்கும் வடிவங்கள் எல்லாம் எவ்வளவோ வரலாறுகளைச் சொல்லும். இந்த மண்டபத்தின் வட பகுதிக்கே அழைத்துச் செல்ல விரும்புகிறேன். அங்கு தெற்கு நோக்கிய சந்நிதி வாயிலில் சாமரை ஏந்தி நிற்கும். பெண்கள் இருவர், அவர்களோடு யாதொரு தொடர்பும் கொள்ளாத ஒரு சிற்ப