பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வேங்கடம் முதல் குமரி வரை

வடிவம்-உச்சிஷ்ட கணபதி ஒன்றும் இருக்கும். இவை சாதாரணமானவை.

இனி மேற்கு நோக்கிக் கோயிலுள் நுழைய விரும்பினால் நாம் உடனே போய்விட முடியாது. மூன்று அற்புதமான சிலைகள் வழி மறிக்கும். வாயிலுக்குத் தென் பக்கத்தில் உள்ள அன்னபூரணி, வடபக்கத்தில் உள்ள அதிகார நந்தி, கண்ணப்பர் எல்லாம் நான்கு அடி உயரத்தில் உள்ள அழகிய கற்சிலைகள். அதில் அன்னபூரணி ஓர் உயிர் ஓவியம். கையிலே அவள் அமுத கலசம் ஏந்தி நிற்கிற ஒயில் ஒன்றே போதும். அவளைப் பிரார்த்தித்துக் கொண்டே கோயிலுள் நுழையலாம். நேரே கருவறைக்கே செல்லலாம். கருவறை வாயிலிலே கல்லில் ஒரு சிலை. செம்பிலே ஒரு படிமம் முன்னையது கார்த்திகேயன். பின்னையது போக சக்தி அம்மன். இரண்டும் பார்த்துப் பார்த்து அனுபவிக்கத் தகுந்தவை. இவர்களைக் கண்டு களித்தபின் ஐராவதேசுவர ரையும் வணங்கிவிட்டு வெளியே வந்து ஒரு சுற்றுச் சுற்றலாம். ராஜ கம்பீரன் மண்டபத்தின் உள் தோற்றத்தைப் பார்த்தோம் முன்னால். வெளித் தோற்றம் ஒரு தேர் போலவே இருக்கும். தேர்ச்சக்கரங்கள் உருளும்; குதிரைகள் ஓடும். மேலும் ஒவ்வொரு வரிசையிலும் எண்ணிறந்த சிற்பவடிவங்கள், யாழ் வரிசைகள் எல்லாம் மிக்க அழகோடு அமைந்தவை. மேலும் நடந்தால் ஒரு மாடத்தில் அக்கினி உட்கார்ந்திருப்பார், இன்னொரு மாடத்தில் வீரபத்திரர் ஆடிக்கொண்டிருப்பார் திரிபுவனத்தில் கண்ட சரபர் வேறே ஒரு சிறு கோயிலுள்.

இவை தவிர யானை சிங்கம் போர், யானையின் மத்தகத்திலே பாய்ந்து அதனைக் கிழிக்கும் சிங்கம் எல்லாம் தத்ரூபம். இன்னும் சிற்ப உலகிலே எண்ணிறந்த வின்னியாசங்கள். ஒரே வடிவிலே யானையும் எருதும் என்றெல்லாம். இக்கோயில் வடபக்கத்து மண்டபத்திலேதான் பிக்ஷாடனரும், அவருடைய . அழகில் மயங்கிய