பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5. பழையாறை பட்டீச்சுரர்

வாழ்வில் ஏழைமை மிகவும் கசப்பானது. உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாமல் தவிக்கும் நிலை விரும்பத்தகாததொன்று மாத்திரம் அல்ல, வருந்தத் தக்கதொன்றும்தான். ஆனால் அந்த வாழ்வைக் கலைக்கு ஒரு பொருளாக பாட்டாக வடித்தோ, சித்திரமாகத் தீட்டியோ காட்டினால் ரஸிகர்கள் அனுபவிக்கிறார்கள்; ஆனந்தம் கொள்கிறார்கள். இல்லாவிட்டால் இன்றையத் திரை வானிலே இந்த ஏழை எளியவர்கள் வாழ்வே அதிகம் இடம் பெறுவானேன்? 'அம்மா பசிக்குதே, ஐயா பசிக்குதே' என்று ஒரு பிச்சைக்காரன் - ஆம்-குஷ்டரோகியும், நொண்டியுமான பிச்சைக்காரனது பாட்டு பிரபல மடைவானேன்? ஆனால் இப்படி எளிய வாழ்வைக்கூட, பார்ப்பவர்கள் உள்ளத்தில் விரசம் தோன்றாதவாறு நல்ல கலை அழகோடு காட்டலாம் என்று நினைக்கிறார் ஒரு கவிஞர்.

அவர் பெயர் தெரியவில்லை . ஆனால் ஊர் தெரிகிறது. அவர் பிறந்து வளர்ந்தது சக்திமுற்றத்தில். அதனால் சக்திமுற்றப் புலவர் என்றே பெயர் பெறுகிறார். இந்தப் புலவர் வறுமையால் வாடிப் பாண்டி நாடு வருகிறார். உண்ண உணவு