பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

41

தாராசுரம் ஸ்டேஷனிலிருந்து வண்டி வைத்துக் கொண்டு செல்லலாம். கார் வசதி உள்ளவர்கள் காரிலும் போகலாம்.

தேரில் மேவிய செழுமணி
வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமை
சேர்பதி பழையாறை

என்று சேக்கிழார் பாடுகிறார். ஆனால் இன்று அங்கு தேரும் கிடையாது. தேரோடும் வீதிகளும் கிடையாது. முதன் முதல் நாம் பழையாறை வடதளி என்ற பகுதியையே சென்று சேருவோம். அங்கு ஊர் என்று சொல்லும் அளவுக்கே வீடுகள் கிடையாது. ஒரேயொரு மாடக்கோயில் இடிந்து சிதிலமான நிலையில் இருக்கும். கோச்செங்கணான் கட்டிய மாடக் கோயிலாக இருக்கலாம். இந்த இடத்துக்கு அப்பர் வந்திருக்கிறார். அவர் வந்த போது சமணர்கள் இந்த வடதளிக்கு முன்னால் தங்கள் மடத்தைக் கட்டிக் கோயிலை மறைத்ததோடு, மூர்த்தியையும் தாழி ஒன்றால் மூடி வைத்திருக்கிறார்கள்! ‘வண்ணங்கண்டு நான் உம்மை வணங்கி அன்றிப் போகேன்' என்று அப்பர் அங்கே சத்தியாக்கிரஹமே பண்ண ஆரம்பித்திருக்கிறார். இறைவனும் அந்த வட்டார அரசன் கனவில் தோன்றி, தான் இருக்குமிடத்தை அறிவித்துச் சமணரது குறும்பை அடக்குமாறு சொல்லியிருக்கிறார். அரசனும் மறுநாள் அங்கு வந்து தாழியை அகற்ற வடதளி ஈசுவரும் வெளி வந்திருக்கிறார். இவரையே அப்பர்,

நீதியைக் கெட நின்று
அமணே உணும்
சாதியைக் கெடுமாச்
செய்த சங்கரன்
ஆதியைப் பழையாறை
வட தளிச்
சோதியைத் தொழுவார்
துயர் தீருமே