பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

53

இதைப்பற்றி ஒரு வரலாறு. தேவசர்மா என்பவன் ஜைமினி முனிவரின் சாபத்தால் கிரௌஞ்சப் பட்சியாகி இந்தப் புஷ்கரிணியை அடுத்துள்ள ஒரு மரத்தின் கிளையில் இருந்திருக்கிறான். ஒரு நாள் இரவு புயல் அடித்து மரத்தின் கிளை ஒடிந்தபோது புஷ்கரிணியில் விழுந்து தன் சாபம் நீங்கியிருக்கிறான். புண்ணிய தீர்த்தங்களில் இரவில் நீராடக்கூடாது என்பது பொது விதி. அதற்கு விலக்காக இரவில் நீராடிய கிரௌஞ்சப் பட்சியும் சாப விமோசனம் பெற்றதால் இந்தப் புஷ்கரிணி அஹோராத்ர புஷ்கரிணி என்று பெயர் பெற்றிருக்கிறது.

கோயிலுள் நுழையலாம். கருவறையிலே ஒப்பிலி அப்பன். கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும் பூமிதேவி நாச்சியார். வடக்கு நோக்கி இருந்த கோலத்திலும், மார்க்கண்டேயர் கன்னிகாதானம் செய்து கொடுக்கும் கோலத்திலும் காட்சி கொடுக்கின்றனர். ஒப்பிலி அப்பன் உண்மையிலேயே தன் ஒப்பார் இல் அப்பன் தான். கிட்டத்தட்ட எட்டடி உயரம். கம்பீரமான தோற்றம், பால் வடியும்

முக விலாசம். அரையிலே பொன்னாடை, இரண்டு கைகளில் ஆழியும் சங்கமும், ஒரு கை அரையில் பொருந்த மற்றொன்று கன்னிகாதானத்தை ஏற்கும் முறையில் அமைந்திருக்கிறது . அழகனுக்கு ஏற்ற அழகி பூதேவி. இக்கோயிலில் அம்மைக் கென்று தனிச் சந்நிதி கிடையாது. இருவரும் அத்தனை ஐக்கியம்! இங்கு நடக்கும்

வே.மு.க.வு - 5