பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வேங்கடம் முதல் குமரி வரை

திருநாட்களில் சிறப்பானது திருக் கல்யாண மகோத்சவம்தான். ஐப்பசி மாதம் திருவோணத்தில் தொடங்கிப் பத்து நாட்கள் சிறப்பாக நடக்கும்.

இந்த ஒப்பிலியப்பனைப் பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆக நால்வரும் பாடி மங்களாசாஸனம் செய்திருக்கிறார்கள். நம்மாழ்வார் பாடிய ஐவரைப் பற்றித்தான் முன்னமேயே தெரிந்து கொண்டிருக்கிறோமே. இவர்களின் மணி ஆப்பனுக்கு ஒரு சந்நிதி நந்தவனத்துக்குள் இருக்கிறது. அது சிதிலமாக இருப்பதால் திருப்பணி நடக்க ஏற்பாடாகியிருக்கிறது. அதனால்தானோ - என்னவோ செப்புச் சிலை வடிவில் உள்ள மணியப்பன் விண்ணகர் அப்பனோடு கருவறையிலேயே எழுந்தருளியிருக்கிறார். இங்குள்ள உற்சவர் ஏகபத்னி விரதரே. 'இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்' என்ற செவ்விய வரம்பில் நிற்கிறார் போலும். ஆனால் யார் கண்டார்கள்? அவருடைய மார்பில் வக்ஷஸ்தலத்தில் சிதேவி இல்லை என்பதை. அவர்தான் ஆடையும் நகைகளும் அணிந்து மார்பை நன்றாக மறைத்துக் கொண்டிருக்கிறாகே ஒப்பிலி, அப்பனாம். விண்ணகரப்பனை, மணியப்பனை எல்லாம் வணங்கியபின் இந்தக் கோயிலில் உள்ள மற்ற