பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

பாடினார் அப்பர். இவர் விண்ணகரப்பனைக் காணும் அருள் கிடைத்தால் வேண்டேன் மனை வாழ்க்கையை என்கிறார். நாம் யாரைப் பின்பற்ற? மனை வாழ்க்கையில் இருந்து வாழ்ந்துதான் அதில் உள்ள துயர்களை யெல்லாம் அறிவோமே. ஆதலால் நாம் விண்ணகரத்து ஒப்பிலியப்பனைத் தரிசித்துக் கொண்டே மகிழ்ச்சி பெறலாமே. நாம் மங்கை மன்னன் கட்சியிலேயே சேர்ந்து, வேண்டோம் இம்மனை வாழ்க்கை என்றே சொல்லுவோம். 'வேண்டின் உண்டாயில் துறக்க' என்றுதானே வள்ளுவரும் கூறியிருக்கிறார்.