பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வேங்கடம் முதல் குமரி வரை

ஏதோ பெண் சாதிக்கு அடங்கி வாழ்பவர் என்றாலும், இப்படி சிவனுக்கும் மேற்பட்ட பரத்துவம் உடையவராக இருக்கிறாரே என்பதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி. இனி நாச்சியார் கோயிலை நோக்கி நடக்கலாம். அந்தக் கோயிலையும் முந்திக், கொண்டு ஒரு பெரிய திருக்குளம் தோன்றும். 684 அடி நீளமும் 225 அடி அகலமும் உள்ள இந்தத் திருக்குளத்தை மணிமுத்தாறு என்று கூறுகிறார்கள், நறையூர் நம்பிக்கு அணிவிக்கத் திருப்பாற் கடலிலிருந்து வைர முடியைக் கருடாழ்வார் எடுத்துப் போகும்போது அதில் உள்ள மணி ஒன்று கழன்று விழுந்திருக்கிறது இக்குளத்தில். அதனால் தான் மணிமுத்தாறு என்கிறார்களாம். இது மிகப் புனிதமான தீர்த்தம்: இறங்கி நீராடுவதற்கு வசதியாகவும் இருக்கும். ஆதலால் நீராடிவிட்டே கோயிலுள் செல்லலாம். .

கோயில் வாயிலில், நிரந்தரமாகப் பந்தல் போட்டு வைத்திருக்கிறார்கள். கோயில் வாயிலை 75 அடி உயரமுள்ள கோபுரம் அழகுசெய்கிறது. கோபுர வாயிலில் ஒரு மாடத்தில் தும்பிக்கை ஆழ்வார் இடம்பிடித்து உட்கார்ந்திருக்கிறார், அவரை வணங்கிவிட்டு உள்ளே செல்லலாம். உள்ளே நுழைந்ததும் ஏதோ தெரியாத்தனமாக மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கே வந்து சேர்ந்து விட்டோமே என்று தோன்றும். அப்படி உருண்டு திரண்ட பெரிய தூண்கள் ஏந்தும் மண்டபம் ஒன்றைப் புதிதாகச்