பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8. திருச்சேறை சாரநாதன்

முன்னர் நாம் வட ஆர்க்காடு மாவட்டத்தில் பாலாற்றின் கரையில் உள்ள பள்ளிகொண்டானுக்குப் போயிருந்த பொழுது ஒரு வரலாற்றைக் கேட்ட ஞாபகம் இருக்கும். அங்கு பள்ளி கொண்டிருப்பவர் ரங்கநாதன். காவிரியிலே துயிலும் ரங்கநாதரிடமிருந்து இவரைப் பிரித்துக்காட்ட இவரை உத்தர ரங்கநாதன் என்கிறார்கள். இந்த ரங்கநாதர் கோயிலிலே ஒரு சிறு இடம், கஸ்தூரி ரங்கநாதருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. விசாரித்தால் இந்தக் கஸ்தூரி ரங்கநாதரே அந்த உத்தர ரங்கநாதரைக் காப்பாற்றிக் கொடுத்தவர் என்பார்கள். (ஆம். காத்தற் கடவுளான ரங்கநாதரே இன்னொரு ரங்கநாதரால் காப்பாற்றப்பட வேண்டியவராக இருந்திருக்கிறார் என்பது விசித்திரம்தானே.)

அதாவது முஸ்லிம் மன்னர்கள் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து இங்குள்ள கோயில்களை இடித்துத் தகர்த்து மூர்த்திகளை உடைத்து எறிந்து கொண்டு வந்திருக்கிறார்கள். பள்ளிக்கொண்டானுக்கு வந்து விடுவார்கள் என்று அஞ்சிய பக்தர் மூலவர் படுத்துக் கிடக்கும் வாயிலை நன்றாகச் சுவர் வைத்து மறைத்துக் கட்டி விட்டு ஒரு சிறு ரங்கநாதரை