பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்பார்கள். இதைச் சுற்றிவளைத்துக்கொண்டே சென்று புஷ்கரணிக்கரையில் இறங்கலாம். இங்கு கோயிலை விடப் புஷ்கரணியே சிறப்புடையது. நல்ல விசாலமான படிக்கட்டுகள் எல்லாம் கட்டி வைத்திருக்கிறார்கள். மற்ற புஷ்கரணிபோல் அல்லாமல் தெளிவான தண்ணீரையும் நிரப்பியிருப்பார்கள். கோயிலுக்கு வடக்கில் முடி கொண்டான் ஆறும், தெற்கே குடமுருட்டி ஆறும் ஓடுகின்றனவே! தெளிந்த தண்ணீர் நிறைவதற்குக் கேட்டானேன். இந்தச் சார புஷ்கரணி எப்படி உருவாயிற்று என்று தெரியவேண்டாமா? யுகப் பிரளய காலத்தில் மகாவிஷ்ணு பிரும்மாவை அழைத்து விரைவில் மண் எடுத்து அதில் ஒரு கடம் பண்ணி அதற்குள் சகல வேத ஆகட், சாஸ்திர புராண கலைஞானங்களையெல்லாம் ஆவாகனம் பண்ணிப் பத்திரப்படுத்தச் சொல்லியிருக்கிறார். அவரும் அப்படியே பல இடங்களில் மண் எடுத்துக் கடங்கள் பண்ணிப் பார்த்திருக்கிறார். அத்தனை கடங்களும் நிலைத்து நிற்காமல் உடைந்து உடைந்து போயிருக்கின்றன. கடைசியில் வியாசர், மார்க்கண்டேயர், பராசரர் முதலியோர் தவம் செய்த இடத்திற்கு வந்து மண் எடுத்துக் கடம் பண்ணியிருக்கிக்கிறார். அந்தக் கடம் பின்னம் அடையாமல் நிலைத்திருக்கிறது. அதில் வேதங்கள், ஆகமங்கள் எல்லாம் பதனப்படுத்தப் பட்டிருக்கின்றன. அதனாலேயே யுகப் பிரளய காலத்தில் அவை அழியாமல் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.

இப்படிப் பட்ட காரணமாகவே அத்தலம் சாரக்ஷேத்திரம் என்று பெயர் பெற்றிருக்கிறது. கடம் செய்ய மண் எடுத்த இடத்தையே சார புஷ்கரணியாக்கியிருக்கிறார். (மக்களாகிய நம்மை யெல்லாம் இந்தப் பிரமன் இப்படி மண்ணெடுத்து மண் எடுத்துத்தானே உருவாக்கியிருக்கிறான்! நாம் கூட இந்தச் சாரபுஷ்கரணி மண்ணால் ஆனவர் தாமோ என்னமோ! நம்மில் பலர் எல்லா வகையிலும் சாரம் அற்றவர்களாயிருக்கிறார்களே என்கிறீர்களா? அவர்களைச்