பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

வேங்கடம் முதல் குமரி வரை

செய்ய பிரமன் வேறு இடத்தில் மண்ணெடுத்திருப்பான் போலும்!) இந்தச் சார புஷ்கரணியில் நீராடியதும் முதல் முதல் சென்று தரிசிக்க வேண்டியது, அக்குளத்தின் மேல் கரையில் தென் மேற்கு மூலையில் அரச மரத்தடியில் இருக்கும் காவிரித் தாயாரைத்தான். அவள் மாமதலைப் பிரானாக அவதரித்த குழந்தையை அணைத்த வண்ணம் இருக்கிறாள்.

பிரம்மாவும் விஷ்ணுவும் வேறே அங்கே நின்று கெண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் இங்கு எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள் என்று தெரியத் தல புராணத்தையே புரட்ட வேண்டியதுதான். இந்தக் காவிரி இருக்கிறாளே, அவள் மிகவும் பெருமைக்காரி, பொறாமைக் காரியும் கூட. இவள் பொறாமையெல்லாம் அந்தக் கங்கை பேரிலேதான். கங்கையைப் பாடுபவர்கள் 'தெய்வப் பொன்னியே பொருவும் கங்கை' என்று பாடியிருந்தாலும், இவளது பொறாமை வளர்ந்தே வந்திருக்கிறது. ஒருநாள் விந்தியமலை அடிவாரத்தில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி முதலிய ஏழு கன்னிகைகளும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வான்வழிச் சென்ற விஸ்ரவசு என்ற கந்தர்வன் இக் கன்னிகையரை வணங்கியிருக்கிறான். 'யாரைக் கண்டு வணங்கினான் அவன்?' என்று ஒரு விவாதம் கிளம்பி யிருக்கிறது கன்னிகையரிடையே. விவாதத்துக்கு முடிவு காண பிரம்மாவையே அணுகியிருக்கிறார்கள்.

அவரோ மாவலியாம் அசுர மன்னனை வாழ்விக்க வந்த வாமனர் திரிவிக்கிரமனாக வளர்ந்து நின்ற போது அவரது திருவடியைத் திருமஞ்சனம் செய்து வைத்த கங்கையே புனிதமானவள் என்று சொல்லி விடுகிறார். மற்ற அறுவரில் ஐந்து பேர் மரியாதையாக ஒதுங்கிக் கொள்ளக் காவிரி மட்டும் இதை ஒப்புக் கொள்கிறாள் இல்லை. மிக்க ரோசத்தோடு கங்கையைவிடப் புனிதமானவளாகக் கருதப்பட வேண்டும் என்று நாராயணனை நோக்கித் தவம் புரிகிறாள். அவள் சார