பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

சாரநாதன் கோயிலுடன் ஒப்பிட்டால் இக்கோயில் பெரிய கோயில் அல்லதான். என்றாலும் இக்கோயிலுக்கு ஒருவருக்கு இருவராக, சம்பந்தரும், அப்பரும் வந்து வணங்கியிருக்கிறார்கள்; இறைவனைப் பாடியிருக்கிறார்கள்.

விரித்த பல் கதிர் கொள்
வெடி படு தமரு கங்கை
தரித்த தோர் கோல கால
பயிரவனாகி, வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திரு மணி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வர் தாமே.

என்பது அப்பர் தேவாரம். நாமும் அந்த அழியாச் செல்வரை வணங்கி வரலாம்.

சார புஷ்கரணி - திருச்சேறை