பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இறங்கிவண்டியோ, காரோ வைத்துக் கொண்டு சென்றாலும் போய்ச் சேரலாம். இல்லை, கும்பகோணத்தில் இறங்கி, நாச்சியார் கோயில், திருச்சேறை கோயில்களுக்கு எல்லாம் போய்த் தரிசித்துவிட்டுப் போய்ச் சேரலாம். இந்த வழியில் போனால் - வசதி இருந்தால், நாலூர், நாலூர் மயானம், குடவாயில் முதலிய பாடல் பெற்ற கோயில்களுக்குமே போய்த் தரிசனம் பண்ணிவிட்டு இங்கு வந்து சேரலாம். எப்படி வத்நாலும் சாலையில் இறங்கி மேற்கே கொஞ்ச தூரம் நடக்க வேண்டும்.

அப்படி நடந்தால் முதலில் தர்சன புஷ்கரணியைத் தரிசனம் பண்ணலாம். இந்தப் புஷ்கரணி தரிசனம் பண்ணுவதற்குத்தான் ஏற்றது. இறங்கித் துளாவிக் குளிப்பதற்கெல்லாம் ஏற்றது அல்ல. ஆதலால் 'விறு விறு' என்று கோயிலுக்குள்ளே நுழையலாம். அங்கு கோயில் கொண்டிருப்பவர் பக்தவத்ஸலர்; அவரையே பத்தாரவிப் பெருமாள் என்பார்கள் அங்குள்ளவர்கள். கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் இவரைக் கண்டு வணங்கிக் கொள்ளலாம். இவரையே மங்கை மன்னன் பதினான்கு பாசுரங்களில் பாடிப் பரவியிருக்கிறார். கண்ண மங்கைக் கண்ணனை, மங்கை மன்னன் பாடுவது பொருத்தம் தானே.

பண்ணினை, பண்ணில் நின்றதோர்
பான்மையை, பாலுள் நெய்யினை
மால் உருவாய் நின்ற

விண்ணினை, விளங்கும் சுடர்
சோதியை, வேள்வியை,
விளக்கின் ஒளிதன்னை

மண்ணினை, மலையை அலை
நீரினை, மாலை மாமதியை
மறையோர் தங்கள்