பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

வேங்கடம் முதல் குமரி வரை

கண்ணினை; கண்களாரவும்
நின்று கண்ண மங்கையுள்
கண்டு கொண்டேனே

என்பது மங்கை மன்னன் பாடல். பாடலைப் பாடிக் கொண்டே நாமும் அவனை வலம் வரலாம். அப்படி வலம் வரும்போதுதான், ஒருமாடத்தில் முன் சொல்லிய கஜேந்திர

கஜேந்திர விஷ்ணு

மோக்ஷக் காட்சியைக் காண்போம். இந்த ஒரு காட்சிதானா? இன்னும் பல மாடங்களில் பல கோலங்களில் பெருமாள் நின்றுகொண்டிருப்பார். ‘தாயெடுத்த சிறு கோலுக்குக் குழைந்து ஓடி, தயிர் உண்டு வாய் துடைத்த மைந்தனாம்' கண்ணனை வேணு கோபாலனாகக் காண்போம். இத்துடன் பூமா தேவியைக் காத்தளிக்கின்ற வராக மூர்த்தி, இரணியன் உடல் கிழித்து உதிரம் உறிஞ்சிய நரசிம்மன், சேம மதிள் சூழ் இலங்கையர் கோன் கரமும் சிரமும் துணித்த அந்தக் கோதண்டராமன் முதலியவர்களையெல்லாம் நல்ல நல்ல கல்லுருவில் காண்போம். இத்தனை சிலைகளையும் தூக்கி அடிக்கும் சிலை ஒன்றும் இங்கு உண்டு. ஆதிசேஷனை