பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

வேங்கடம் முதல் கரி வரை

இருக்கிறது. கோயில் நிரம்பப் பெரிய கோயிலும் அல்ல, சிறிய கோயிலும் அல்ல. இறைவன் பெயர் பூவணநாதர், இறைவி பெயர் மின்னனையாள். கோயிலுக்கு வடபுறம் வைகை நதி ஓடுகிறது பாண்டிய மன்னரோடு சோழ மன்னரும் சேரரும் வந்து வணங்க பெருமை உடையவர் பூவணநாதர், இதை ஞானசம்பந்தர் பாடுகிறார்

அறையார் புனலும் மாமலரும்
ஆடு அரவார் சடைமேல்
குறையார் மதியம் சூடி
மாது ஓர் கூறுடையான் இடமாம்
முறையால் முடிசேர் தெள்னர்,
சேரர். சோழர்கள் தாம் வணங்கும்
திறையார் ஒளிசேர் செம்யை
ஓங்கும் தென் திருப்பூவணமே.

என்பது அவரது தேவாரம், தமிழ் மன்னர் மூவர் மாத்திரம் அல்ல, தேவர் மூவரில் ஒருவனான பிரமனும் வந்து பூஜித்துப் பேறு பெற்றிருக்கிறான் என்று வரலாறு கூறும்.

இத்தலத்தில் மின்னனையாளையும் மிஞ்சிய புகழ் உடையவளை பொன்னனையாள் என்று கண்டோம். மின்னனையாள் திருமோல் விளங்க ஓர் தன்னமர் பாகமதாகிய சங்கரன்” என்று பாட ஆரம்பித்த சந்தரரும்,

முன்நிளையார் புரம்மூன்று எரியூட்டிய
பொன்னனையான் உறைபூவணம் ஈதோ

என்று தானே முடித்திருக்கிறார்? பொன்னனையள் உருவாக்கிய பூவணநாதர் பொன்னனையான் என்ற பெயரோ விளங்குகிறார். உத்சவமூர்த்தி நல்ல அழகான வடிவம், கன்னத்தை கிள்ளி முத்தமிட்ட தழும்பு, வடிவத்தில் இருக்கிறது. வடிவத்தைக் கண்டால் நமக்கும் கூடக் கன்னத்தைக் கிள்ளலாமா என்று தோன்றும் அர்ச்சகர்கள் அனுமதிக்கமாட்டர்களே என்பதனால்தான் கை நீட்டாது வருவோம். பொன்னனையாள் திருவுருவம் செப்புச்சிலையில் கோயிலில் இருக்கிறது. மின்னனையாள் வடிவமும் அழகானதே.