பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

புகழ்பாடுவதைக் கண்டு யாவரும் மகிழ்கிறோம். சில இடங்களில் கிண்டல் செய்வதைச் சிலர் ரசிக்க முடியாதவர்களாயிருக்கிறார்கள். என்றாலும், உண்மையை உணர்பவர்கள் யாரும் அதைக் குறை கூற மாட்டார்கள். கிண்டல் செய்வதற்கு மனத்துணிச்சல் மட்டுப் போதாது. களங்கமற்ற உள்ளத்தில் அரும்பிய எல்லையற்ற ஈடுடாடு வேண்டும். அப்பொழுது தான் கிண்டல் பயன் தருவதாக இருக்கும். வெறும் மனத்துனிச்சலிலிருந்து வெளிப்படுவது கேவலம் வட்சையாகத்தான் அமையும்.

யதார்த்த வாழ்வில் அல்லது நாடகம், சினிமா போன்ற துறைகளில் அசம்பாவிதம் என்று கருதி ஒதுக்கப்படும் தோற்றம், கல்லிலும் செம்பிலும் உருவாகி ஆலயங்களுல் இருப்பதை நாம் அசம்பாவிதம் என்று எண்ணியதாவது உண்டா? அலது நம்மனையார் உள்ளத்தில் விகார எண்ணங்களை அவை உண்டாக்கியதாவதுண்டா ? தாயின் மடியில் கிடந்து பாலருந்தும் நிர்மமான குழந்தைகளைப் போன்றுதானே நாம் எல்லாம் கலையமுதை, அழகமுதைப்பருகி அமைதி பெற முயன்று கொண்டிருக்கிறோம். இல்லையா? அப்படித்தான் உள்ளத்தில், விசாரமோ, வெறுப்போ, பகமையோ சிறிதுமின்றிக் கிண்டல் செய்வது ஒரு அருமையான வேண்டத்தக்க பணி; கலையும் கூட அந்த கலையும் கைவரப் பெற்றவர் சகோதரர் பாஸ்கரன் அவர்கள்.

"குலவித்தை கல்லாமற் பாகம் படும்" என்ற முதுமொழிக்கு பாஸ்கரன் அவர்கள் ஒரு சான்று. பாட்டனார் ஒரு நல் கவிஞர் தந்தையாரோ சிறந்த ஓவியப் புலவர். இலக்கிய உணர்வும், ஓவிய உணர்வும் இவர்க்குப் பரம்பரையாய் கிட்டிய செல்வம். நேர்மைக்கும் செம்மைக்கும் பெயர் பெற்ற வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார் அவர்களுடன் இவருக்கு மிக நெருங்கிய தொடர்புண்டு. அவர்களுடன் பலகாலம் நெருங்கிப் பழகிய நற்பேறு இவருக்கு எதையும் ஆராய்வதற்குரிய நெறிமுறைக்கு ஆக்கம் தந்தது என்று சொல்லலாம். அதற்கெல்லாம் மேலாக ரசிகமணி டி.கே.சி. அவர்களுடன் இருந்த உறவும், ஈடுபாடும்தான் இவருக்கு எல்லா வல்லமையும் கொடுத்தவை என்று கூற வேண்டும். விஷயத்தை அணுகுவது. ஆய்வது, தேர்வது, துய்ப்பது, எடுத்து விளக்குவது